செவ்வாய், ஏப்ரல் 29, 2014

ஐபிஎல் கருத்துகள் 2014


ஞாயித்துக்கிழமெ நாளு எச்சாப்போச்சுன்னும், தலை நேரு நிக்க மாட்டீங்குதுன்னும் ஆட்டம் பாக்க முடியாம சோறும் உங்க முடியாம படுத்தாச்சு! எந்திரிச்சா எந்த ஊர்ல கிடக்கோம்னு சந்தேவமா பாக்க வேண்டி ஆயிடுது! விளையாட்டுகள்ல சென்னை சூப்பர் கிங்ஸ்சை விரும்புகிறார்னு நம்மளை கோர்த்து உட்ட மவராஜ் வெளியூரு! சரி ஹைலைட்ஸ் பாத்தா ரிபீட்டுன்னு மேட்ச் நடந்த நேரத்தைவிட எச்சா ஓடும்போல! தண்ணிகுடிக்க போனவங்க மூக்கு நோண்டறதை கூட காட்டறாங்க சாமி! கூட்டத்துல ஒரு பிள்ளை நெத்தில ரெய்னான்னு பெயிண்ட்ல எழுதி வச்சிருக்குது! ரொம்ப பாசம் போல! வந்து ஒரு சிக்ஸ் உட்டுட்டு ரெய்னா போயிட்டாரு! பிள்ள மூஞ்சி செத்துப்போச்சு போங்க! அது நாளைக்கி பாருங்க நெத்தில மேக்ஸ்வெல்னு பெயிண்ட் பண்ணீட்டு வந்து குக்கிக்கும்! மேக்ஸ் கொஞ்சம் வெல்லா மாட்டினார்னா ஆஸ்திரேலியா போயிடும் பாருங்க!


என்னோட ஆசையெல்லாம் அடுத்த ரெண்டாவது ரன்னை முடிஞ்சா அடுத்த மேச்சுலயாவது அடிச்சு, 5 ரன் அடிச்சதும் பேட்டை தூக்கி பார்வையாளர்களை பார்த்து ஆட்டிக்காட்டணும். 5 ரன் அடிச்ச ஒடனே பிச்சுக்கு முத்தங் குடுக்கணும்! காம்பீர்னா யார்னு நிரூபிக்கணும்! என்எஜமானுக்கு ஐபிஎல் கப்பை வாங்கி கையில குடுக்கணும்! 5 ரன் அடிச்ச ஒடனே இந்தியா டீம்ல ஓப்பனிங் பாட்ஸ்மேனா மறுக்காவும் களம் இறங்கணும்! அத்தினியும் 5 அடிச்ச ஒடனே அடுத்த மேச்சுல பேட்டை ஆட்டிக் காட்டுவன்ல அப்ப நடக்கும்! சேவாக்குக்கு கண்ணு போச்சு! ஆட்டம் போச்சு! எனக்கு கண்ணு இன்னும் தெரியுது. எப்படி ஒவ்வொருக்காவும் அவுட்டாவுறேன்னு போயி உக்காந்து ரீப்ளே பண்ணி பாத்து அடுத்த முறையும் அதே மாதிரி அவுட்டாக கத்துட்டு இருக்கேன்! என்னை வாழ்த்துங்கள்! - கவுதம் காம்பீர்


அட சாமத்துல பந்தாடறாங்களே தூங்கப்போவமுன்னு பாதி பந்தாட்டம் பாத்துட்டு கிளம்பிடறேன். ஜெயிப்பு தோப்பு தெரியாம என்ன போங்க! காத்தால மேக்ஸ்காரன் படமா போடுறான். சிக்ஸ்காரன் வாலிபால் காட்டுறான். இதுக்குத்தான் வெளையாட்டு சேனல்காரனுக்கு ஒளிபரப்பு உரிமை கொடுக்கோணூமுங்கறது! மேக்ஸ்காரன் ஹைலைட் காட்டுவான்னு போயிபார்த்தா அட பிள்ளைங்க சோக பாட்டுன்னாலும் சோடிப்பாட்டுன்னாலும் அந்தக்காலம் மாறியே அதே இடுப்பாட்டம் தான் ஆடுறாங்க! நாஷ் கரோ! ரிசல்ட்டு முகநூல்ல நண்பர்களே போட்டுடறாங்க!
இந்தி பிள்ளைங்களா... சோகப்பாட்டுலயும் தொப்புள் காட்டுறீகளே!

மெக்குலம் புல் பார்ம் சாரே! ஆனா கொஞ்சம் ஆத்திரமா இருக்காப்ல பேட்டை தூக்கிட்டு வந்ததீம்! டோனி யாருகிட்டவும் எதுவும் சொல்லி களத்துக்கு அனுப்புறதில்ல! தவிர நியூசிலாந்து கேப்பனு வேற! ஒன்னும் சொல்லாம இருந்தங்காட்டி மெக்குலம் சூப்பர் கேப்டன் டோனின்னு நிவிஸ் குடுத்துட்டாப்ல! அப்புறம் டுப்ளசிஸ். இவுரு தென்னாப்ரிக்கா கேப்டன். கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கறாரு! போன ஆட்டத்துல தவக்கா ஆட்டம் வழக்கம் போல டோனி ஆடினதால டூப்ளசிஸ் மண்டை காஞ்சு வெளிய போயிட்டாரு! அந்த சங்கடத்துல டோனியும் உடனே கெளம்பிட்டாரு! களத்துல பீலிங்ஸ் இல்லாத மனுசன் எவனும் இல்ல! காம்பீர் முழியையை எல்லாம் பாத்திருக்கீங்கள்ள!

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 15, 2014

வாசிப்புஆதிக்கம்

அவள் பெயர் எதுவாகவோ இருக்கட்டும்
அவள் குடும்பத் தலைவி.
ஐந்து மணியிலிருந்து ஜெயா டிவியில்
சுப்ரபாதம் கேட்டு மகிழ்ந்து
புருசனுக்கு முத்தமிட்டு அனுப்பிதனது
பட்டு வண்ண மேனியை குளியலறைக்குள்
குளிப்பாட்டி, பிங்கி ஆடையுடுத்தி
பிரார்த்தனைக் கூட்டம் சென்று
இறைவனின் ஆசி பெற்று, நேரே
மாதர் சங்க கூட்டமொன்றில்
மைக் பிடித்து, ஆடவர் கொட்டமடக்கும்
அருமை வசனங்கள் பேசி கைதட்டல் பெற்று
கொக்கோ கோலாவை உதடுமீது
பட்டும் படாமல் குடித்து விடை பெற்று
ரிஸ்ட் வாட்ச்சில் மணி பார்த்து
தேவி அபிராமியில் தளபதி விவிஜயின்
திருமலை பார்த்து, கெனடிக் ஹோண்டாவை
வீட்டினுள் தள்ளி, தனதறையில்
நைட்டிக்குள் நுழைந்து வேலைக்காரனை
ஜாடையாய் அழைக்க, ஆடை அவிழ்த்து
ஆசையாய் வந்தவனிடம் சொன்னாள்
நான் தான் மேல! என.

(சொல்லக்கூசும் கவிதை தொகுப்பிலிருந்து)


சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை
நாடகம் ஹிந்தி மூலம் சுரேந்திரவர்மா

1978ல் கிரியா 7 ரூவாயில் போட்ட சின்ன புத்தகத்தை இவ்வளவு காலமும் ஏதோ சரித்திர கதை போல என்று நினைத்து படிக்காமல் விட்டு ரொம்ப தாமதமாகி விட்டது. பார்த்தால் பட்டாஸ் கிளப்பும் அரண்மனைக்கதை இது. சமீபமாக என் ஆசை சரித்திர நாவல் ஒன்று எழுதுவது என்பது. என் கதையில் சரித்திரமாவது ஒன்றாவது? அதை பிறகு பார்ப்போம்.

ஓக்காக் மல்ல நாட்டின் அரசன். அவன் ஆண்மை குறைபாடு உடையவன். அவன் மனைவி சீலவதி. 5 வருடங்களாக குழந்தையில்லை என்பதால் ராஜகுரு, சேனாதிபதி ஆகியோரின் முடிவில் தண்டோரா போடப்படுகிறது.பெளர்ணமி மாலை பட்டத்தரசி சீலவதி அரச மண்டபத்தில் கடமைப்பாவையாகி பவனி வருவார்கள். அச்சமயம் மல்ல நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வருகை தந்து அரசி யாரையேனும் ஒருவனைத் தேர்ந்தெடுத்து ஒரு இரவு மாற்றுக் கணவனாக தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்!

சீலவதி அப்படி ஒரு இரவு தன் பழைய காதலனுடன் இரவு தங்கி வருகிறாள். அவள் பேசும் வசனங்கள் இந்த நாடகத்தில் முக்கியமானவைகளாக இருக்கின்றன. அசத்தும் புத்தகம். இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை! கடைசியாக நம்மெல்லாம் சும்மா போல ஆகிவிட்டது எனக்கு! இதை வாசித்ததும் நல்லது தான். இதற்கும் மேலாக எழுதினால் செய்ய விருப்பபடுவேன்!


நாவல்களில் பயணப்படுவது என்பது குறிப்பிட்ட தூரம் சென்றபிறகு தான் என்பதை நாவல் வாசிப்பாளர்கள் உணருவார்கள். முன்பு 89-ல் மிருகயா, நாயர்சாப் என்கிற மலையாள திரைப்பட வரிசைகளில் மோகன்லால், மம்முட்டி நடித்த படங்களில் அவர்கள் கால தாமதாமாகவே வருவார்கள். அவர்கள் வந்தபின் திரைப்படம் சூடு பிடிப்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.

மணற்குன்று பெண் வாசித்து முடித்தாகி விட்டது. 1962 ல் எழுதப்பட்ட நாவல் என்று முகப்பு சொல்கிறது. இது ஒரு வரலாற்றுப்பதிவாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஜி. விஜயபத்மாவின் மொழிபெயர்ப்பு மிக அற்புதமாக தமிழில் விரிந்திருக்கிறது. அதுவும் மணல்குன்றிலிருந்து நாயகன் தப்பி சென்ற இடத்திலிருந்து திசைமாறி மீண்டும் அவர்களிடம் சிக்கி ஓட்டம் பிடித்து புதை மணலில் சிக்கும் வரை அவன் உயிர் பிழைப்பானா? மாட்டானா? என்று கேள்வி எழச்செய்யும் எழுத்து! அதைவிட அவரின் மொழிபெயர்ப்பு நம்மை கூட்டிச் செல்லும் லாவகம் என்று தான் சொல்ல வேண்டும்!

  ஆரம்பத்தில் விடுமுறை நாளைக்கழிக்க அரைநாள் ரயில் பயணம் செய்து கடற்கரையோரம் சென்ற மனிதன் காணாமல் போய்விட்டான் என்று நாவல் ஆரம்பமாகிறது. தவிர புலனாய்வு செய்தும் அவனைப்பற்றியான தகவலெதுவும் இல்லை. பூச்சிகள் சேகரிப்பாளனான அவன் மணல்தீவில் அகப்பட்டுக் கொள்கிறான். இரவு தங்குவதற்காக அந்த சிற்றூரின் வீடொன்றில் ஒரு பெரியவரால் தங்க வைக்கப்படுகிறான். ஒரு ஏணி மூலம் இறங்கிச் சென்று தங்கும் வீட்டில் கணவனையும் பிள்ளையையும் மணல்புயலில் பலிகொடுத்த ஒரு பெண்ணுடன் தங்குகிறான்.

  இரவில் அவள் மணலை சேகரித்து குன்றின் மேலிருந்து இறங்கும் கூடையில் மணலை நிறப்புகிறாள். விடிகாலை வரை அவள் பணி செய்கிறாள். விடிந்து தூங்கியெழுந்தவன் அவள் நிர்வாணமாக படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுருகிறான். இவன் உடை முழுதும் மணல் துகள்கள் நிரம்பியிருக்க அதை உதறுகிறான். வெளிவந்து பார்க்கையில் ஏணி இல்லை. ஒரு அடிமை போல அங்கு சிக்கிவிடுகிறான். என்று செல்லும் இந்த நாவலில் பயணப்பட நீங்கள் விரும்பினால் வாசிக்கலாம்

Post Comment