எருமைகளை
நாம் மிருகக் காட்சி சாலைகளிலோ
சுராசிக்
பார்க்குகளிலோ
பார்க்க முடியதென்பதை
குழந்தைகளும்
அறிந்திருக்கிறார்கள்!
எருமைகள்
மூதாதையர் அமைத்த கட்டுத்தறிகளில்
இப்போது
தங்குமிடம் அமைப்பதில்லை! அவைகள்
எப்போதும்
மனிதனுக்கான பாதைகளில் பயணிக்கின்றன
மெசப்படோமியாவை நோக்கி!
எருமை
மீது மழை பொழிந்தது போல் நிற்கிறான் பார்!
என்று
எவருடைய குரல் கேட்டாலும் அவைகளுக்கு
காதில்
அடைப்பு விழுந்தது போல்
சாலைகளில்
சாணமிடுகின்றன!
எருமைகளின்
சாணத்தை அள்ளி வந்த
சிறுமியொருத்தி அதில்
பொம்மை செய்து மகிழ்ந்து
அதை
நாயகர்வி என்கிறாள் எருமைகளிடம்! எருமைகள்
நாயகரைப்
பார்த்து வாலை உதறுகின்றன
கொசு
விரட்ட!
மழையில்
நனையும் எருமைகளுக்கு நனைந்த
கம்மந்தட்டை
கத்தையாய் வீசிப்போகிறான்
மேய்ப்பன்
ஒருவன்! கடைசியாக….
எருமைகளுக்கு
தாங்கள் எருமைகள்
என்று
தெரியும் போல!
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக