ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

ஆகஸ்டு- முகநூல் பதிவுகள்

நம்ம புது புத்தகங்களை வாசிச்சு பேசும் நண்பர்கள் அனைவரும் இப்போதைக்கு 50-ஐ கடந்தவர்களாக இருக்கிறார்கள்! சயனம் பற்றி பேசுபவர்கள் 50 பக்கம் வாசிக்கையிலேயே கூப்பிட்டு விடுகிறார்கள்! மகிழ்ச்சி! பெண்களில் சகுந்தலா வந்தாள் பற்றி பேசுபவர்கள் அதிகம் எப்பிடி கோமு?’ என்கிறார்கள். எல்லாம் உங்க கிட்ட பேசுறாப்ல தான்! 

நான் எழுதுபவை இலக்கியம் என்ற வகையறாவில் சேர்த்தியாகாது என்பதை பலமுறை சொல்லி விட்டேன். இலக்கியம் என்பது துணிக்கடைக்காரர்களாலும், ஆசிரியர்களாலும், சினிமா வஜனம் எழுதுபவர்களாலும் வளர்க்கப்படுவது என்பதில் தெளிவாய் இருக்கேன்! நான் சாராயம் காய்ச்சியவன், திருட்டு விசிடி விற்றவன்! ஆக நான் இலக்கியம் என்று எதுவும் எழுதுவதில்லை! நம்பி படிப்பவர்களையும் நான் ஏமாற்றுவதேயில்லை!

00000000000000

ஏப்பா இந்த ரெக்கார்டு டேன்ஸுன்னு கலர் லைட்ட போட்டு ஜிங்குச்சா ட்ரஸ் போட்டு ஆடினே இருந்தாங்களே ஒரு குரூப்பு! யாருக்காக! பாட்டுக்கு ரத்தம் கக்கீட்டு செத்து உழுந்துட்டு காத்தால ஊருக்குள்ள ஜலவாதிக்கி போயினே இருந்தானே கேசவன்! கோவை கமலா தம்மரே தம் பாட்டுக்கு பின்னூக்குல சட்டீல ரிப்புனு கட்டி மாவாட்டினே ஆடினாளே! முருக்கு மாலை ஒன்னை போட்டு விசிலடிச்ச மனோகரன் போயிச்சேந்து வருசம் பலதாச்சு! கமலாவும், கேசவனும் போயி நிம்மதியா சேர்ந்துருப்பாங்கள்ள! ஒரு டவுட்டு பாத்துக்கங்களே!

00000000000000

சில தருணங்களில் தான் நண்பர்களின் குஜால்களை கவனிக்க முடியும். நேற்றைய நண்பர் ஒரு பீர் இறங்கியதும் சுறுசுறுப்பாகி, ‘என்ன இன்னம் அடுத்த பீரை காணம்? இப்ப பாருங்க!என்று சில்லிவண்டாட்டம் கிளம்பினார். கூத்தாகி விடுமோ? என்று அருகிலிருந்த நண்பரிடம் கேட்டேன். வண்டிய எடுத்துட்டு காணாமப் போயிருவாருங்க!என்றதும் நிம்மதியானேன். முடித்துக்கொண்டு கிளம்புகையில் வெளியில் போனில் அரட்டை போட்டபடியிருந்தார் நண்பர். என்ன முடிச்சுட்டீங்களா?’ என்றார். நீங்க கடைய தூக்கிட்டு தான் கிளம்புவீங்க போல!என்றேன். தற்சமயம் அலைபேசியில் என்னை, ’பத்திரமாய் வீடு சென்றடைந்தீராஎன்றார். பிரச்சனை என்னாச்சுங்க?’ என்றேன். பறந்துட்டம்ல! பறந்துட்டம்ல! பறந்துட்டம்ல! என்றார்.

0000000000000

சிவப்பழகு கிரீம் போட்ட பத்தாவது நிமிசத்துல இருந்து வேலை செய்ய்ய்யுதுன்னு இந்த டிவில பாரின் பொண்ணுக சிரிச்சமானிக்கி பல்லைக் காட்டீட்டு போவறதை பார்த்த ராசாமணியக்கா வெசாழன் சந்தக்கடுவுக்கு போன பூமணியக்காட்ட துட்டு குடுத்து வாங்கிட்டு வரச்சொல்லி மூஞ்சில பூசிட்டு ஓடியோடி கண்ணாடில முகரக்கட்டையப் பார்த்துட்டு, அப்பிடியொன்னும் ஏற்பாடாவலின்னு தற்கொலை முயற்சிக்கு போயி இப்ப ஆசுபத்திரில கெடக்கா மக்கா!

00000000000

ஒவ்வொரு தபாவும் ஜெயிக்கறச்சே இந்த டோனிப்பயல் நடு ஸ்டம்ப்பை தூக்கிகினு கிளம்பிடறானே? ஏன் சார் கொண்டுபோயி அவிங்கம்மாட்ட குடுத்து தண்ணிகாய வெக்க அடுப்பெரிக்க குடுத்துடுவானோ! அறிவுஜீவி

00000000000

எழுதப்படாமலே இருந்திருக்கலாம்
உன்னுடனான என் காதல் சொய்க்கூ!
இன்னொருவனை கட்டி, குட்டி போடுவதற்கு
என் புறத்தே ஏன் சுற்றினாய்? 
எதற்காக மருந்து குடித்து நாடகம் அரங்கேற்றினாய்?
எதற்காக உன் சமையலை சாமத்தில் ஊட்டினாய்?
எதற்காக சாமி தின்னீரு தலையாட்டக் கூடாதெனெ
நெற்றியில் இட்டாய்? –எதற்காக போதையில்
கிடந்தவன் மீது தண்ணீர் ஊற்றினாய்? –எதற்காக
நிழற்குடையில் கரிக்கட்டையில் பெயரை 
இணைத்தெழுதி ரசித்தாய்? – எதற்காக இரண்டுமுறை
கலைத்தாய்? 
நீ எனக்கு செய்ததெல்லாம் உனக்கு 
உனக்கு நியாயமாக ஒருவேளை பட்டிருக்கலாம்!
கட்டிக் கொண்டபிறகும் எனை அழைத்து 
மீதமிருக்கும் என் உயிரை ஏன் குடிக்கிறாய்?
எழுதப்படாமலே இருந்திருக்கலாம் இந்த சொய்க்கூ!

0000000000000

அஞ்சான் படத்த பாத்தேபுட்டனுங்! என்னாமா சண்டை போட்டிருக்காரு நாயகன்! இனி பொறவுக்கு வர்ற படங்கள்ளயும் தே மாதிரி சண்ட போடுங்க நாயகன்! டுவாக்கி ஆவாது போல! என்ன பாட்ஷாவுக்கு முன்னுக்காண்ட வந்திருந்தா சூப்பர் டூப்பர்! ஒன்னே ஒன்னுங்க! நெசமாலுமே கொழந்தைக பாக்க வேண்டிய டுவாக்கி படம்! ரத்தம் கொஞ்சம் சாஸ்தி! இருந்தாலும் ரத்தம் கொழந்தைகளுக்கு புடிக்கும்னு சமீபத்துல பேசிக்கறாக!

00000000000000

திரும்புன பக்கமெல்லாம் பெரீவீக சின்னவீகளுக்கு பள்ளியோடமா இருக்கு! சாயந்தர நேரமா கிளம்பினா மஞ்ச, பச்செ, செவப்பு கலருல பள்ளியோட பஸ்சுக தான் தார்ரோடுல ஓடுதுக! இதுல பள்ளியோடத்துல பிள்ளைகளை படிக்க வெக்கச் சொல்லி தலைமுறை சித்த வைத்திய சிகாமணின்னு ஒரு படம்! அட இந்தப்பயலும் அஞ்சானை விட செரி மாத்து மாத்துறான்பா! வாயில ஈக்குமாத்து குச்சி வெச்சு நாக்குக்கு வெளிய காட்டீட்டு தான் பாக்க முடிஞ்சுது!

00000000000

பொழுதோட ஆறுமணிக்கி டொமீர்னு வெடிக்கிற மாதிரி பாமு செட் பண்ணி நம்ம சுப்பிரமணி கழுத்துல கட்டி சேர்ல உக்காத்தி வெச்சுட்டு போயிட்டாங்க பயபிள்ளைக! கெரகம் அவசரத்துக்கு அண்டாக்குள்ள கூட கையி போவ மாட்டீங்குது. கத்திரிக்கோலு வேற இல்ல! ஆக்ஸா பிளேடு இல்ல! 7ஓ கிளாக் பிளேடு யாரோ சரைச்சிட்டு போட்டுட்டு போனது தான் கிடக்குது! குண்டு வெச்சவன் சரைச்சிருப்பானோ என்னமோ! இப்ப நான் பச்சை ஒயர கட்பண்ணுறதா? செவப்பையா? 6 மணிக்குள்ள சொல்லுங்க! உசுருல்ல!

0000000000000

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஊத்துக்குளி வழி செல்லும் பேருந்துகள் எல்லாமே திருப்பூர் மின்மயானத்தை கடந்து தான் சிட்டிக்குள் நுழைகின்றன! நான் செல்லும் சமயமெல்லாம் புகை கூண்டில் புகையும் பேந்த விழிக்கும் முகங்களையும் பேருந்து கடக்கையில் பார்க்கிறேன். இன்று கூட்டமே இல்லை என நினைத்து பேருந்து கடக்கையில் பிரதான வாயிலில் 20 முகங்கள் பிண வருகைக்காக காத்திருந்தனர். பேருந்து கடந்து விட்டது! காதில் ஜென்மம் நிறைந்தது பாடல் ஒலி சும்மாவே கேட்டது! ரூட்ட மாத்துங்கப்பா! பீதியக் கிளப்பீட்டு!

000000000000

நண்பர் ஒருவர் என்னிடமிருந்து ஹரிகிருஷ்ணனின் நாயிவாயிச்சீல சிறுகதைக் கொத்தை வாசிக்க எடுத்துச் சென்றார். மூன்று நாளில் வாசித்து விட்டு, ’அவரு நெம்பரு குடுங்க பேசோணும்என்றார். எழுதிக்கங்க! என்றவன் அவரின் எண்ணையே திரும்பச் சொன்னேன். கடைசி எண்ணை குறித்துக்கொண்டவர், ‘ஏனுங்க எம்பட நெம்பரையே சொல்றீங்க?’ என்றார். விவரமா இருக்காங்களே சனம்!

000000000000

ஏம்மா அனாதைன்னு சொல்றே? உனக்கு அம்மாவா நான் இருக்கேன். உன் கலியாணத்தை என் சொந்தப் பொண்ணு கலியாணமா நெனச்சு பண்ணுறேன்! அழாதம்மா! அழாதே!

டிவியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியொன்றுமில்லை!

000000000000

நண்பரின் ஆபீசுக்கு வந்த பெண் டேபிளில் இருந்த நடுகல் வெளியீடுகளை பார்த்து விட்டு அவற்றில் சகுந்தலா வந்தாளைதூக்கி ஓரம் போய் சேரில் அமர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டாராம். புத்தகங்கள் நெறைய படிப்பனுங்! என்ற அறிவிப்புடன். 50 பக்கம் போயிருந்த போது அவரது கணவர் வந்து சேர்ந்து போலாம் வேணுமுன்னா சின்னுக்கு தொகைய குடுத்துட்டு புத்தகத்தை தூக்கிட்டு போயிடலாம்!என்றாராம். முகமெல்லாம் வெளிறிய நிலையில் அப்பெண் டேபிளில் வைத்து விட்டு செல்ல, அவர் கணவர் சின்னுவிடம் சொன்னது. ‘’ஆன்மீக புத்தகங்கள் இந்த சத்குரு புத்தகமெல்லாம் நெறையா படிப்பாப்லைங்க” 10 நிமிசம் கழிச்சு வந்திருந்தாப்லைன்னா இங்கியே புத்தகத்தை அவிங்க முடிச்சிருப்பாங்க! என்றார் சின்னு.

0000000000

-ஐய்யா சொல்லுங்கய்யா! 
-டேய் மாதர் சோத்

-அது நானில்லீங்கய்யா! ராங் நெம்பரா இருக்கும் சரியா பாருங்க!

-நீ என்னை போட்டுத்தள்ளீடுவீடா..

-ஐய்யா! எனக்கு செரியா கேக்கலீங்க! இங்க கொஞ்சம் எறச்சலா இருக்கு! போடறீங்களா? போடுங்க! நல்ல விசயம்!

-உனக்கு ஜெனே தெரியுமாடா? அவன் கல்லறை தெரியுமாடா?

-செத்துச் செத்து வெளையாட கூப்புடுறீங்களா ஐய்யா!


00000000000000000

Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

சயனம், சகுந்தலா வந்தாள் -பார்வைகள்

ஈரோடு புத்தகக் கண்காட்சியும், அதையொட்டி நடுகல் பதிப்பகம் சார்பில் நடந்த குருத்தோலைவெளியீட்டு நிகழ்வும் அருமையோ அருமை. நாவலைப் பற்றி பெருமாள் முருகன் அருமையாகப் பேசினார். அதைப் பற்றி தனியாக எழுதலாம். நண்பர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள். கிடைத்ததும் யூடியூப்பில்  ஏற்றிட வேண்டியதுதான்.

வியாழக் கிழமை ஒரே கொண்டாட்டம், திண்டாட்டம். அப்படியும் ஒரு சில புத்தகங்களை வாங்க முடிந்தது. அதில் ஒன்றுதான் எதிர் வெளியீட்டு அரங்கில் வாங்கிய சயனம் நாவல்.

வெள்ளிக் கிழமை மதியம் கையில் எடுத்தேன். ஆடி மாதக் காற்று. முகிலோடும் வானம். தென்னை மரத்துக்கடியில் கட்டிலைப் போட்டு வழக்கமாக இடையூறுகள், தொலைபேசி அழைப்புகள், ஃபேஸ்புக் ஏதுமின்றி புத்தகம் படிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பக்கத்தில் தட்டம் நிறைய முறுக்கு மட்டும் இருந்தால் சரி. அப்படித்தான் சயனத்தில் ஆழ்ந்தேன். சனிக்கிழமை மதியத்துக்குள் வீட்டில் சுட்ட முறுக்கில் பாதியும், சயனமும் தீர்ந்தது.

வழக்கமாக முன்னூறு பக்கத்துக்கு மேலுள்ள நாவல்களை வாசித்தால் சலிப்பு உண்டாகி விடும். ஒரு சில படைப்புகளை வாசித்தால் நாலு நாளுக்கு ஆய் வராது. முடிப்பதற்கு அவ்வளவு முக்க வேண்டியிருக்கும். சயனமும் கொஞ்சம் பெரிய புக். முக்கவெல்லாம் வேண்டியிருக்கவில்லை. உள்ளே தானாக இழுத்துக்கொண்டு போனது.

வா.மு.கோமு நல்ல எழுத்தாளர். இடுப்புக்கு மேலே சிறப்பாக எழுதக் கூடியவர். இடுப்புக்குக் கீழே அடடா இன்னுஞ்சிறப்பு! வழக்கமாக அவரது கதைகளில் மேட்டர் இருக்கும். மேட்டர் – ’ஒருமைகவனிக்க! ஆனால் இதிலே மேட்டர்ஸ்.. மேட்டரோ மேட்டர்.. எல்லாக் கதாபாத்திரத்துக்கும் சீன் வைத்திருக்கிறார். அதிலும் ஸ்கூலில் சத்துணவு ஆக்கும் அம்மாவும், குமரேசன் வாத்தியாரும் செஸ் விளையாடுவார்கள். (செஸ் தான்.. இடையில் க்இல்லை.) அடடா அருமை.. மிஸ் பண்ணாதீக. அப்பறம் வருத்தப்படுவீக..

கோமுவின் நாவல்கள் போகிற போக்கில் நிகழ்வுகளை உரையாடலில் சொல்லிச் செல்லும். நல்லது கெட்டதுகளை போதித்துக் கொண்டிருக்காது. தலித்தியம் பேசாது. அநேகமாக அவரது கள்ளிநாவலுக்குப் பிறகு இதில் தலித்தின் வலிகளைத் தொட்டுச் செல்கிறார். வேலுச்சாமிக் கவுண்டர் கலியனை கரட்டில் தூக்கிக் கட்டிக் கொல்கிறார். உள்ளூர் பள்ளியின் தலைமையாசிரியை இந்திரா மாதாரி வளவுச் சனங்களோடு ஓரமாக நின்று கோவில் விசேசத்தை வேடிக்கை பார்க்கிறார். நாவலில் எல்லாக் கதாபாத்திரத்துக்கும் மேட்டர் மடிந்தாலும் தாழ்த்தப்பட்ட ஜாதி வாத்தியார் மட்டும் ஒரு பெண்ணிடம் நூல் விட்டு கன்னத்தில் அடி வாங்கிக் கொள்கிறார்.

கோமுவில் பிற படைப்புகளைப் போல readability இதன் சிறப்பம்சம். சொல்லாடல் அனாயசமாக அவருக்குக் கைகூடி வருகிறது. அன்றாட வாழ்வில் கிராமங்களில் புழங்கும் மொழிதான். உதாரணத்துக்கு கலியன் பொண்டாட்டி வள்ளி, “சந்தேகப்படறவன் பீயை நாய் கூடத் திங்காதுஎன்று அவனிடம் சொல்வாள். இந்த மாதிரி உரையாடல்கள் கதை முழுக்க இறைந்து கிடக்கின்றன.


என்ன ஒரே விஷயம். சென்னிமலைப் பக்கத்தில் எப்போதும் மக்கள் காம இச்சையோடே திரிகிறார்கள் என வேறு பிராந்தியத்து ஆட்கள் நினைக்கும் அபாயம் ஒன்றுதான். கோமுவைக் கேட்டால், “இதெல்லாம் நெசமா நடந்துது தானுங்கோ. நடக்காதத நாம எழுதற இல்லீல்லோ!” என்பார். -செல்லமுத்து குப்புசாமி

--------------------------


நடுகல் பதிப்பக துவக்க விழாவிற்கும், அதன் புத்தக வெளியீட்டுக்கும் செல்வோம் என்பதை இறுதிவரை முடிவு செய்யவில்லை. நண்பன்Rasu Rasu செல்வதை அறிந்து,நானும் அண்ணன் Seema Senthil அவர்களும் கிளம்பிச் சென்றோம்.

விழா நல்லபடியாக நடந்து முடிந்ததும்.புத்தகங்களை வாங்கிக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினோம்.ஈரோட்டிலிருந்து, கோவைக்குச் சரியாக இரண்டு மணிநேர பேருந்துப் பயணம். புத்தகங்கள் இருப்பதால் இரண்டுமணிநேரம் பயணக் களைப்பு தெரியாது என்பதால் முதலில் நான் திரு வா.மு.கோமு அவர்களின் சகுந்தலா வந்தாள், புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.

பேருந்து பெருமாநல்லூர் தாண்டி வந்துகொண்டிருந்தபொழுது புத்தகத்தின் முன்னுரை தாண்டி முதல் அத்தியாயத்திற்குள் நுழைந்தேன். சரியாக 29 வது பக்கம்வரைதான் என்னால் படிக்க முடிந்தது.சற்று இறுக்கமான காற்சட்டை அணிந்து இருந்தேன்,அதனால் மடியில் வைத்து புத்தகம் படிக்க முடிய வில்லை என்பதே பொருத்தமாக இருக்கும். நிலைமையைச் சரிசெய்து கொண்டு வீட்டிற்குச் சென்றே படித்துக் கொள்ளலாம் என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.(இரட்டை அர்த்தமாய் இதை எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

நேற்றைய தினமே புத்தகம் பற்றிய பதிவு போடலாமா? வேண்டாமா? என்ற எண்ண ஊசலாட்டத்தின் மத்தியில், இப்பொழுது ஒருமனதாகவே பதிவு செய்துவிட்டேன்.

நான்கு அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் உங்களைப் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி. தே பரவச நிலையோடே விபச்சாரத்தில் தன் தாயால் தள்ளப்பட்ட கல்பனாவுக்கும்,அவளைக் காதலிக்கும் ஜானுக்கும் இடையிலான ஊடல்,கூடல்களை அவர் பாணியிலேயே அடித்து நொறுக்குகிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகமாகும் கமலக் கண்ணனைக் கட்டாயம் உங்களுக்குப் பிடித்துப் போகும்.துபோலவே மூன்றாம் அத்தியாயத்தில்தான் சகுந்தலா வருகிறாள்.இரண்டாம் அத்தியாயத்தில் க.கண்ணனை அவன் மனதிற்குள் சகுந்தலாவை எண்ணிப் புலம்பவிட்டு ,மூன்றாம் அத்தியாயத்தில் சகுந்தலாவை அட்டகாசமாக அறிமுகப்படுத்தி, நம் வாழ்க்கையில் எங்கேனும் ஏதேனும் சந்தித்திருந்த பாத்திரத்திற்கு சகுந்தலா எனப் பெயர்சூட்டி மனதில் நுழையவைக்கிறார்.

'
நாணயஸ்தனுக்கு' மொழிபெயர்ப்பு தொறந்தவாயன் என்பதிலிருந்து, கணவன் மனைவிக்கு இடையே கூடல் அரங்கேற கணவன் நடத்தும் பிரம்மப்பிரயத்தனம் உற்பட அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறார்..கண்ணனை மனதிற்குள் இருந்து பேச வைத்ததிலிருந்து, எழுத்தாளர் ஒரு மனிதன் மனதிற்குள் எந்த அளவுக்கு ஊடுருவ முடியுமோ அந்தளவுக்கு உள்சென்று வார்த்தைகளைக் கொண்டு வந்து சம்பவப்படுத்தி இருக்கிறார் என்பதை அறியமுடியும்.

இந்நாவலில் காட்டப்பட்டிருப்பது ஒரு சகுந்தலாவின் வாழ்க்கை மட்டுமே என்று கி..திலீபன் அவர்கள் கூறியதைப் புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ஓராயிரம் கமலக்கண்ணன்களின் புலம்பல்களும் காட்டப்பட்டிருக்கிறது.

முன்னுரையிலயே இது பைசாவிற்காக எழுதப்பட்ட நாவல் என்று எழுத்தாளர் சொல்லி விடுவதால் சிற்சில விசயங்களை சமரசம் செய்துகொண்டாக வேண்டியுள்ளது. இருப்பினும் சமூகத்தின் குரூரத்தை எழுத்தாகப் பதிவு செய்த திரு வா.மு.கோமு அவர்களின் தைரியத்தைப் பாராட்டியாகவே வேண்டும். 

நன்றி.

-----------------------------

Post Comment

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

நடுகல் 4 புத்தகங்கள் வெளியீடு

                                    கள்ளம் -தஞ்சை ப்ரகாஷ் நாவல் -விலை 210.00
                குருத்தோலை -செல்லமுத்து குப்புசாமி நாவல் -விலை 150.00
   
   

             சகுந்தலா வந்தாள் -வா.மு.கோமு நாவல்- விலை 150.00
            அப்புச்சி வழி -வா.மு.கோமு நினைவோடை -விலை 100.00

Post Comment