சனி, செப்டம்பர் 27, 2014

முகநூலில் பதிவுகள் 2

அன்பு  திரு . வா. மு.. கோமு  அவர்களுக்கு . வணக்கம் 

நான்  கவிஞர்  ஜெயதேவன் .சுந்தர சுகனில்  என் கவிதைகளை 
வாசித்திருக்கலாம்  பிற  இதழ்களிலும்  ழுதுகிறேன் . சென்னையில் 
ஒரு  முறை  உங்களோடு  பேசி இருக்கிறேன்  சுகன்  அறிமுகம் செய்து .
நிற்க  உங்கள்  கதைகள்  அரிதாகவே   வாசிக்க  கிட்டும் .

 அப்புச்சி வழி  தொகுப்பு  வாசித்தேன் ஜெயகாந்தனுக்குப்  பின்  மிக ஆர்வமாக  வாசித்த தொகுப்பு  எனலாம் தரம்  குறித்து  அல்ல . வாசிப்பு   குறித்து .

 இயல்பான  மனிதர்களை  இயல்பு  மாறாது  படைப்பது அறிய கலை . சமீபத்தில்  பி..சா.. குப்புசாமி [ முன்னாள் வார்த்தை  பத்திரிகையின்  ஆசிரியர் ] மிக  அற்புதமாக  ஜவ்வாது மலை பின்னணியில் அவர் எழுதுவார் . அதேபோல்  சென்னிமலை மலை  பின்னணியில்  உயிரான  மனிதகளை  இக்கதைகளில்  நீங்கள்  படைத்திருக்கிறீர்கள் . 

 பிரபலமான  பலர்  எழுதுவது  செயற்கையாக இருக்கிறது . எஸ் .ராமகிருஷ்ணனின்  துணை  எழுத்து  வாசிக்க நன்றாய்  இருந்தது . கதைகள்  இயல்பாய்  இல்லை 

  அவ்வகையில்  உங்கள்  கதை  மனிதாகள் உயிரான  மனிதர்கள் .எழுத்தாளர் ஏகாம்பரம் ,வாஸ்த்து மாணிக்கம் ,சாமியார் கண்ணம்மா ,அட்டைக்கத்தி அரவிந்சாமி  என  எல்லாம் நாம் பார்க்கும் மனிதர்கள் .

அரவிந்த்சாமி  போனில் ரிங்  டோனாக  மூக்குத்தி  பூமேலே  பாடலை  வைத்ததே  நீங்கள்  ஒரு சிறந்த  இயக்குனர்  ஆகலாம்  என்பதனைக் காட்டுகிறது .

  உங்களை  இன்னுமா  சினிமாக்காரர்கள்  அணுகவில்லை .அணுகுவார்கள் . நன்றி 

                                                          ஜெயதேவன்     
00000000000000

குடும்பத்தில் எழும் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் பெண் எழுத்தாளர்கள் அழகாக கையாள்கிறார்கள் மாத நாவல்களில். கணவனை வேறொருவளுக்கு விட்டுத்தராத மனைவிமார்கள், மாமியாரின் வசைச் சொற்களை கேட்டுக் கொண்டே கணவனிடம் அதை போட்டுக் கொடுக்காமல் ஜமாளித்து இறுதியில் சுப முடிவுக்கு நகரும் படைப்புகள், என்று குடும்பத்துக்குள் கதைகள் ஓடுகின்றன.

சில பல கதைகள் ஆபீசுக்கு கிளம்பும் கதாநாயகிகள் புதிய எம்.டி வருவதாக சொல்லி துவங்குகின்றன. எல்லா எம்.டியும் நாயகியை கடிந்து கொள்கிறார்கள். அல்லது பழைய காதலனாக இருக்கிறார்கள். கடைசியில் சுப முடிவு நோக்கி நகரும் கதைகள் இவைகள்.

இது போக எல்லா அப்பா அம்மாக்களும் வேலைக்கு செல்லும் தன் மகளை பொறுப்பான கணவனிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். மொத்தத்தில் மாத நாவல்களில் வரும் பெண்பிள்ளைகள் பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாத உள்ளம் கொண்டவர்களாகவும், துணிச்சல் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். இது சினிமாவுக்கு மாறுபட்டதாக இருக்கிறது. சினிமாவில் ஆண்கள் முக்கியப்பணிகளை செய்வதாகவும் பெண்கள் கவர்ச்சிக்காகவும் வந்து போகிறார்கள்.

எட்றா வண்டியெ!! அல்லது வர்றேண்டா களத்துக்கு! மூவ்மெண்ட்.     

00000000000000000000000

நீளமான பெயர் கொண்ட இந்த தாடிக்காரனுடன்
நான் என் உரையாடலை நிகழ்த்திக்கொண்டு
இருக்கையில் உன் ஊரில் மழை பெய்திருக்கலாம்!
நீ மழையை வேடிக்கை பார்த்தபடி இரவு
உணவுக்கு சப்பாத்திமாவை பிசைந்தபடியிருந்திருக்கலாம்!
அல்லது உன் தந்தைக்கு தேனீர் தயாரிக்கும்
மும்மரத்தில் இருந்திருக்கலாம்! எதுவுமேயில்லாமல்
வெறுமனே ஜன்னலில் முகம் வைத்து வாசலில்
விழும் பெரும் மழைத்துளிகளை ரசித்தவாறு
இருந்திருக்கலாம்! –இதெல்லாம் இந்த தாடிக்காரனால்
வந்தது தான். சும்மாயிராமல் செக்கோஸ்லோவியாவில்
கிழவி இந்த நேரம் இருமிக் கொண்டிருப்பாள்! உன்னுடன்
கதையாடிக் கொண்டிருக்கிறேன் நான்! என்று
இவன் சொன்னதால் தான்! –காற்று எனக்கு
சாதகமாய்த்தான் வீசிக்கொண்டிருக்கிறது கிழக்கு பார்த்து!
வெறுமனே மழைத்துளிகளை வேடிக்கை
பார்ப்பதை ஒதுக்கி விட்டு போய் கட்டிலில் விழு!
இரவு உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளும்
மாத்திரைகளை மறந்து விடாதே! ஒரு நேரத்தைப்போல்
ஒரு நேரம் சரிவருவதில்லை காதலிலும் கூட!
00000000000000

பாலியல் பலாத்காரம் என்று
இதைச் சொல்லுவார்கள் மக்கள்!
00000
இந்தப் பா நல்லாவே இல்லையென
நீங்கள் எல்லாரும் சொல்லித் தருவீர்கள்
பார்த்த ஆட்களிடமெல்லாம்! –அவர்களும்
நீங்கள் நாற்றமெடுத்த ஒன்றைப் பற்றி
நேற்று மாலையில் பேசியதாக பின்
எல்லோரிடமும் உங்கள் தலை தின்று
சொல்லிக் கடப்பார்கள்! இப்படியாக
அந்தப் பா ஊர்முழுக்க
பாடப்பட்டுக் கொண்டிருக்கும்!
0
அந்தப் பா-வில் வந்த குறுந்தாடிக்காரனுக்கு
அவனது குறியில் ஒரு சூரிக்கத்தி இருந்ததாக
அவனால் குறி குதறப்பட்ட மங்கை ஒருத்தி
விசாரித்த காக்கி உடுப்புகளிடம் சொல்லியிருந்தாள்!
மேலும் அவன் கைவிரல்களில் அனைத்திலும்
ஆக்ஸா பிளைடுகள் இருந்தனவென்றும்
அவைகளால் தான் என் உடைகளையும் என்
மார்புகளையும் கிழித்தானென்றும் அவள்
உதட்டின் வழியே ரத்தம் கசிய, விட்டு விட்டு
சம்பவத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் ஏதாவது
அவர்கள் செய்வார்கள் என்றெண்ணி!
ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவளை
பத்திரிக்கையாளர்கள் பல கோணங்களில்
புகைப்படமெடுத்து அவைகள் தெளிவாக
பதிவாகியிருக்கிறதா? என்று மரத்தடியில்
நின்று செக் செய்து கொண்டிருந்தார்கள்!
0
இந்த இடம் ரொம்ப வலிக்கிறது!” என்று
வயிற்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டே
அந்தப்பெண் சுருண்டு படுத்தவள் அப்புறம் வலி
இருப்பதாக அவர்களிடம் முறையிடவில்லை
பின் எப்போதும்! –பின்னர் ஆம்புலன்ஸில் சைரன்
ஒலிக்க அவள் செல்லுமிடம் அவளுக்கு பின்
எப்போதும் தெரியாமலே போயிற்று!
0
பின் ஒருநாள் கருக்கங்காட்டில் தன்
அறுக்கப்பட்ட குறி கவ்வியபடி ஒருவன்
வானம் பார்த்து படுத்திருக்கும் புகைப்படம்
ஒன்று நெட்டில் உலாவிக் கொண்டிருந்தது
கண்டு சிலர்பாவம்என்று முனகிக் கொண்டிருந்தார்கள்!
0

புகையிலை மட்டும் போடாமலிருந்தால்,
அதுவொரு நல்ல வேசி!
பான்பராக் மட்டும் குதப்பாமலிருந்தால்
அதுவொரு நல்ல வேசி!
வாட்டர் பாக்கெட் வாங்காமல் கோட்டர்
பாட்டிலை அப்படியே கவிழ்த்துக்
கொள்ளாமலிருந்தால் அதுவொரு நல்ல வேசி!
வந்தவனின் பாக்கெட்டில் பத்து ரூபாயையும்
அபேஸ் செய்யாமலிருந்தால்
அதுவொரு நல்ல வேசி!
எந்த நேரமும் காது புளித்துப்போவது போல
கெட்ட வார்த்தைகளை துப்பாமலிருந்தால்
அதுவொரு நல்ல வேசி!
இப்படியே போனால் அதுகளை நீ பின் எப்படி
அடையாளம் காண்பாய் சகோதரா?
 0000000000000Post Comment