திங்கள், ஜூலை 13, 2015

முகநூல் இடுகைகள்


சு.ராவை நான் என்றுமே ஆழ்ந்து வாசித்ததில்லை. அவரது சிறுகதைகள் பக்கம் சென்றதுமில்லை! இருந்தும் அடுக்கில் இருந்த இந்த தொகுப்பை வெளியில் எடுத்து விட்டேன். ஒன்றிரண்டு கதைகள் வாசித்துப் பார்த்தேன். வாசிக்க உகந்தவைகள் தான். காலம் தான் ரொம்ப முன்னே இருக்கிறது. அதாவது 50களிலிருந்து இவர் எழுதியவைகள். சிறுகதை இன்று என்னமாதிரியான வடிவ நேர்த்திக்கு மாறியிருக்கிறது? என்பதை இந்த தொகுப்பு வாசிக்கையில் நாம் உணரலாம்!

000
முன்று மாத தி இந்து வாசிப்பு எனக்கு ஏதோ இலக்கிய புத்தகம் வாசிக்கும் மனநிலையையே கொடுத்து வந்தது. எஸ்.ரா, பி.கே.பி, கீ.ரா என்று தினமும் ஒவ்வொரு ஆள் ஏதாவது விளக்குகிறார்கள். வாசிக்க நேரமெடுக்கும் செய்திகள்! நல்ல படிப்பாளிகள் படிக்க வேண்டிய பேப்பர். கடைசி ஒரு மாதமும் ஏதோ வருகிறது என்ற மனநிலை தான். நான் பேசாமல் குருவியார் பதில் படிக்கவே செல்கிறேன். வாரத்தில் நான்கைந்து படங்களுக்கும் மேலாக வருகிறது செல்கிறது என்கிறார்கள். என்ன ஏது என்று ஒன்றும் தெரிவதில்லை! இன்றிலிருந்து மாறி விட்டேன் தந்திக்கு! ஆஹா! மரத்தில் மோதிய லாரியின் முன்பகுதி நொறுங்கியிருப்பதை படத்தில் காணலாம்! வரிகளை இப்படி படிக்கையில் தான் …!

000

பெரீப்பா.. 50 ரூவா ஐ போனுக்கெல்லாம் சார்ஜ் போட வேண்டியதில்லே! கொஞ்சம் நேரம் கம்முன்னு வெச்சிருந்தம்னா அதே ஏறிக்கும். இப்ப பாருங்க.. சார்ஜ் புல்லுன்னு காட்டுது!

000


Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

கம்முனு வச்சிருந்தா அப்படியே ஏறிக்குமா?
அதுசரி.
எல்லாம் நன்று.