புதன், ஜூலை 08, 2015

முகநூல் பதி இரண்டுமாலை 6.45 மணியளவில் நண்பருடன் பயணப்படுகையில் சாலையில் சிதறிய அரிசி மணிகளை கூட்டமாய் அமர்ந்து உண்ணும் காக்கை கூட்ட்த்தை புகைப்படம் எடுக்க நீண்ட நேரமாகிவிட்டது! காரணம் தெரிந்த நண்பர் வந்து நிற்க சுட்டுடுவானுகளோ என்று கூட்டம் கலைந்தது. போக வண்டி வாகனம் வருகையில் பயப்பட்டு கலைகிறது. என்னை நண்பனாக அவைகள் உணர நேரமெடுத்தது! பகிர்ந்து உண்ணுவதை பாடப்புத்தகத்தில் படித்ததோடு சரி! இருந்தும் இவன் கொலைகாரனல்ல என்பதை உணரும் நேரம் வரை காத்திருந்து அடித்த ஸ்டில்!


 (மைண்டு வாய்ஸ் : இதெல்லாம் ஒரு பொழப்பு)

000

நண்பர் என்று ஒருவர் என் மாலை நேரத்தை கொலை செய்தார். என் வாழ்வு கிராமிய வாழ்வுக்கு உண்டானது! நகர வாழ்வு பற்றியான ஆசைகள் ஏதுமில்லை எனக்கு!

புலம்பெயர் படைப்பாளிகள் பற்றி ஆரம்பித்து என் வாயை கிளறினார். பூட்டு பற்றியும் கதவு பற்றியும் விளக்கமாக எழுதும் எழுத்தாளரை பற்றி பேச ஆரம்பித்து இந்தக் கருமங்களை வைத்து வாய்ப்பாடியில் உட்கார்ந்து நான் எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்? என்றேன்.

மற்றொரு படைப்பாளி தன் படைப்புகளால் பாராட்டப்படுகிறாரே தமிழ்நாட்டில்? என்றொரு கேள்வி வைத்தார். சாமி! நான் வாழ்வது போராட்டக்களமல்ல! இங்கே துவக்குகள் வெடிப்பதில்லை! எனக்கான வாழ்க்கை வேறு! துவக்குகள் வெடிப்பதற்குள் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். அதைப்பற்றி நூல் அளவேனும் தெரிந்து கொண்டு வருத்தப்படவோ.. அல்லது ஐயோ என்று முனகிக் கொண்டு கிடப்பதற்கான வாழ்வு எனக்கு அமையவில்லை!

அப்ப நீங்க? என்றார். எனக்கான வாழ்க்கையை எம் தமிழ் மண்ணோடு வைத்துக் கொண்டிருக்கும் சாதாரண எழுத்தாளன்! எனக்கு புரட்சிகள் பற்றி தெரியாது! உள்ளூரில் இழவு விழுந்தாலே 2 நாள் தான் வருத்தப்பட இயலும் என்னால்!

புலம்பெயர் படைப்பாளிகளின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான ஒன்றுதான். அவற்றை மொழிபெயர்ப்பு இலக்கியமாக மனதில் இருத்திக் கொண்டு தான் எனக்கு வாசிக்க இயலும்! அவற்றில் துவக்குகள் வெடித்ததாகவும், கடல் வழியாக புலம் பெயர்ந்ததாகவும் வாசிக்கும் கதைகள் அவைகள் கதைகளாக கொடுக்கப்பட்டிருக்கும் காரணத்தால் ஒரு சாண்டில்யனை வாசிக்கும் மனோபாவத்தில் தான் வாசிக்கிறேன். அதுபற்றி பேச மாட்டேன்.

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒவ்வொரு வாழ்கை உண்டு! அதை அவர்கள் பதிவு செய்கையில் எல்லோருக்கும் மண்ணின் மீதான பாசம் வரவேண்டும் என்று நினைப்பது தவறானது! வாழ்க்கை அலைக்களிப்பில் யாரும் தப்புவதேயில்லை!

இறுதியாக……. வேலை இல்லாத ஒருவன் சூடாக எதற்காக தேனீர் குடிக்க வேண்டும் என்று நினைத்து ஆற வைத்துக் குடித்தான். _எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதை ஒன்றில்!

000

Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

இரண்டும் நல்லாயிருக்கு.