-டேய் யாரைடா நாம மிச்சம் வெச்சோம்? யாரடா அவன்? நம்மாளுங்களை வரிசையா போட்டுட்டு இருக்கான்?
-பாஸ் நம்ம மூங்கில்பாளையம் மாரி?
-அவனத்தான் தென்னந்தோப்புல வச்சு காரியம் பண்ணிட்டோமேடா! கீரிப்பாளையம் கிரி?
-அவனத்தான் நடுரோட்டுல வெட்டிச் சாய்ச்சீங்களேன்ணா போன வருசமே!
-ஆமா! தொட்டிபாளையம் தொப்பியா?
-அவனத்தான் நீச்சல் தெரியாதுன்னு கெணத்துல தள்ளி வுட்டு ஒம்பது மாசமாச்சேண்ணா!
-அப்ப யார்றா அவன்? போயித் தேடி ஒருமணி நேரத்துல என் கண்ணுக்கு முன்னால கொண்டாங்கடா!
000
-ஆளைத்
தெரிஞ்சும் உட்டுட்டீங்களாடா? அவன் அப்பனை தூக்குங்கடா!
-பாஸ், அவனோட அப்பன பொதச்ச எடத்துல மரமே வளந்துடுச்சு!
-அங்கென்னடா பண்றீங்க? அவன் அம்மாளைத் தூக்குங்கடா!
-அவங்கம்மா அனாதை ஆசிரமத்துல கோமாவுல கெடக்குது பாஸ் அஞ்சு வருசமா!
-அப்ப அவன் காதலியை தூக்குங்கடா!
-கம்முனு அமைதியா இருங்க பாஸ்! நாங்களே அவன் கிட்ட மாட்டிக் கிடக்கோம். உங்களை போட்டுத் தள்ள வந்துட்டு இருக்கான்! ப்ளைட் ஏறிடுங்க!
000
மல்லுக்கட்டி
நின்ன மச்சானெ
மயிலெறகு
சேலை கட்டி
மடை
தொறக்கப் போகையிலே
மயக்க
வந்த புள்ளி மானே!
தெம்மாங்கு
பாடச் சொல்லி
ஒய்யார
நடை போட்டு
கண்கலங்க
வச்சுப் போனதேனோ?
கோழி
கூவும் நேரம் பார்த்து
கொண்டையிலே
பூவும் வெச்சு
கோலம்
போடும் கோலத்திலே
சொக்க
வெச்ச பச்சக்கிளி
சொல்லிக்காமப் போனதேனோ?
000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக