திங்கள், ஜனவரி 11, 2016

என் முந்தைய நாவல்கள் செய்த வேலை!பெண்களிடம் நேரடியாக பேச இயலாமல் எழுத்தை வைத்து நீங்க நல்லா இருக்கணும் சாமிகளா! என்பதை சொல்வதற்காக தனியெ 4 நாவல்களை எழுதி என் பெயரை கெடுத்துக் கொண்டவன் அடியேன்! (பாலியல் வெப்சைட்டுகள் யாருக்கு தேவை? ஆண்களுக்கா? பெண்களுக்கா?) யாரு நாசமாப் போனா என்னா என்று எந்த நேரமும் டிவி சீரியல் போல அழும் கதைகளை எழுத தமிழில் என்னால் முடியும்! ஆனால் அதை அல்லது அந்த வரிகளை எழுதுகையில்.. ஒரு சிரிப்பு வருமே! அதை.. ஒட்டு மொத்த.. கேவலம் போல எண்ணுகிறேன்! (தனிப்பட்ட முறையில.. கற்று வந்த இடம் என்னை கை விட்டதே!) ஆகவே தான் நான் முன்பாக 89-ல் ஆரம்பித்த எழுத்து வடிவத்தில் கமர்சியல் கதைகளை எழுத ஆசை கொள்கிறேன். அது என் பாகெட் மணியை பத்திரமாக வைத்துக் கொள்ளும் வேலையை செவ்வனே செய்யும்!

டெய்லி தந்தி விசயங்களை இலக்கிய வடிவம் பண்ணிய ஆட்களில் நான் ஒருவன் மட்டுமே தமிழில் சிரமப்பட்டேன்! இங்கே என் பக்கத்தில் இருக்கும் பெண்கள் பார்க்கிறார்களா? இல்லை புன்னகைத்து செல்கிறார்களா? என்பது எதுவும் தெரியாத நிலையில், என் இலக்கிய நாவல்கள் (எழுதினால்) அது ஆண்களை போற்றிப் பாடுவதாகவே இனி அமையும்! அதிலும் தங்களுக்காக தேடி எடுத்துக் கொள்வது அவர்கள் வேலை! ஆக நான் கமர்சியல் பக்கம் நோக்கி திரும்புவதே என் தலையாய கடமை போல உணருகிறேன்! “ அத்தான்! ஏன் இப்படி கோபிக்கிறீர்கள்? புருசனின் காலைத் தொட்டு காலையில் கும்பிடுவது இயற்கையின் வரப்பிரசாதம்!”

எந்த விடுதலையையும் தமிழில் எழுத்தில் நாவலாக கொண்டு வந்து பெற்று விட முடியாது! பெயருக்கு 300 பேர் வாசிக்கும் இலக்கிய நாவல்கள் வெறும் நாவல்கள் மட்டுமே! (அப்படித்தான் கணக்கு சொல்கிறது! ஆனால் அதுவும் பொய்!)  நீங்கள் பார்க்கலாம் நாடகங்கள் டிவி திரையில் ஓடுகையில் கூடவே, “இவ இருக்கா ஊரை ஒழிச்ச ...” என்று பேசும் தாய்மார்களை!

நான் கூடிய சீக்கிரம் இதிலிருந்து தப்பித்தாக வேண்டும்! ஒரே வழி.. ரயில் ஓடுகிறது என் வீட்டின் முன்னால்

000

Post Comment

தமிழ் நாவல் திரைக்காகவா?படமெடுக்க தகுதியான 10 நாவல்கள்- எஸ்.ராமகிருஷ்ணன் அந்திமழையில 2 பக்க கட்டுரை எழுதியிருக்காப்டி! லிஸ்ட்ட பாத்தேன். முதல்ல கண்ணுக்கு சிக்குல! அப்புறம் நாம ஏமாறக்கூடாதுன்னு மறுக்கா பாத்தேன்! அதானே! அவரோட நிமித்தம் நாவல் அதுல ஒன்னு! ஓடிப்போய் மண்டையை செவுத்துல அடிச்சுட்டேன்! வெசையாப் போயி முட்டீட்டனாட்ட இருக்குங் டாக்டர்!

000
நண்பர்களே! எழுத்தாளர்களின் கருத்தில் எஸ் ரா பற்றி வேடிக்கைக்காக போட்டதல்ல என் பதிவு! சினிமா வேறு. அவர் அந்திமழையில் சொன்ன 10 படங்களையும் எடுக்க முடியாது தமிழில்! இது தான் உண்மை நிலை! இலக்கிய கதைகள் வேறு! 

சினிமாக்கு கதை உண்டா? என்று எத்தனையோ இளம் இயக்குனர்கள் கேட்கிறார்கள்! ஆனால் அப்படியான முயற்சிகள் என்னிடம் கிடையாது! அப்படியான தமிழ்நாட்டில நாம் வாழவில்லை! இயக்குனர்களுக்கு உணடான ஸ்கிரிப்ட்டில் எழுத்தாளர்கள் தங்களுக்கான பணீயினை வசனம் என்ற முக்கிய இடத்தில் மற்றும் பணியாற்றுகிறார்கள்! அது தான் சரியானதும் கூட! 

புத்தகம் எழுதி விட்டு காசு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கும் நிலையில் இன்றும் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கும் பட்சத்தில்! நான் சாதாரணன். என்னிடம் திறமைகள் பல ஒளிந்திருக்கலாம்! அதை கண்டு பிடித்து வாங்குவதில் என்றைக்குமே இயக்குனர்கள் கெட்டிக்காரர்கள்! சினிமா கதை என்பது புரடியூசர்களை பாதிக்காத அளவு.. சாலையில் ஒரு லாரி பயணிப்பதாகவும்.. கார் ஒன்று அதை முந்திச்செல்வதாகவும்... தி டூயல் மாதிரி இருக்க வேணும்! ஆனா வாயை நான் திறந்தால் அந்த ஸ்கிரிப்ட்டை எல்லோரும் எடுப்ப்பார்கள்! கண்டு பிடிப்பது எளிதானது தான். அதற்கு ஆற அமர அனைவரும் (இயக்குனர்..) உட்கார்ந்து முடிவு செய்ய வேணும்!

000

Post Comment

டெக்ஸ்காமிக்ஸ் வாசிப்பது என்பதே ஒரு விநோதமான மனநிலை தான். இன்னாடே சின்னப்பயபுள்ள மாதிரி? பொம்மெ போட்ட பொத்தவம் வாசிக்கிறே? என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ? என்ற அச்சம் வேறு முதுகுக்குப் பின்னால் ஒரு கருத்த பூதம் போல் ஒட்டி அமர்ந்திருக்கிறது. என் சவுரியம் அது! என்று முகத்துக்கு நேராக அவர்களிடம் கூற மனது ஒப்ப மாட்டேன் என்கிறது. ஏடா! நீ சுந்தர ராமசாமி வாசிச்சவனல்லோ! அதென்னமோ பேரே... ஆங் சி.நாவராசன் வாசிச்ச பயலல்லோ! கேவலம்டே!

ஆக நாம் முன்பாக பைங்கிளி புத்தகங்களை வாங்கி இடுப்பில் செருகி வீடு வந்து காக்கி அட்டை போட்டு வாசித்தது போல இப்போது காமிக்ஸ்களை அட்டை போட்டு வாசிக்க வேண்டிய மனநிலைக்கு வந்து விட்டோம். என் மகனாரிடம், புதுசுடா! என்று காட்டிய போது குடுத்த பாவத்துக்கு சும்மா பார்த்து விட்டு 150 ரூவாயாப்பா? என்றான். அடுத்து பிரின்ஸ் என் ஆதர்ஸ நாயகர்களில் ஒருவர்டா! அவருது 4 புக்கை ஆர்டர் போடணும்! என்றதும், பிரின்ஸ் உன்னோட நண்பராப்பா? என்றான்! ஆஹா வென்றது பாஞ்சாலங்குறிச்சி! பலே வெள்ளையத்தேவா!

சட்டத்திற்கு ஒரு சவக்குழி டெக்ஸ் வில்லரது தனித்த சாகசம்! கருப்பர் இனத்தை சேர்ந்த பொடியனிடம் அவர் சொல்லும் வாசகம் காமிக்சை எங்கோ கொண்டு செல்லும் தலமாற்றம் கூட இந்த புத்தகத்தில் நடைபெற்று விட்டது. “உன் மேனியின் வண்ணம் உன் வாழ்க்கையின் உயரத்தை தடை செய்ய அனுமதிக்காதே! நீ எந்த மனிதனுக்கும் சளைத்தவனில்லை என்பதை நினைவில் இருத்திக் கொள்”

போதும்! காமிக்ஸ் புத்தகம் விற்பனைக்காக இங்கே நான் விமர்சனம் என்று எழுதப் புகவில்லை! முடிந்தால் உங்கள் பால்யத்தை மீட்டெடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்காக! காமிக்ஸ் பற்றி அறியாத நண்பர்கள் அதில் ஒரு குகையில் நுழைவது போன்று நுழைந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக!

00

Post Comment

இது தாண்டா போலீஸ்திரைப்படத்தை ஜனங்கள் நிறைந்த அரங்கில் மகிழ்ச்சி வெள்ளத்தில் காண வேண்டும். அப்படித்தான் இருக்குமென மகேஷின், இது தாண்டா போலீஸ்! படத்தை மை சன்னுடன் சென்னிமலை அன்னமார் திரையரங்குக்குச் சென்றேன். போக இன்று சனிக்கிழமை! என்னைப்போல ஏகப்பட்ட மகேஷ் ரசிகர்கள் இருந்து விட்டால் பையன் கூட்டத்தில் நசுங்கி விடுவானே! ஆனால் வண்டியை ஸ்டேண்டில் போட்ட போது என்னுது தான் முதல் வண்டி! (பின்பாக நான் வண்டியை எடுக்க வருகையில் ஏழு வண்டிஉள்ளே சென்று திருப்தியாக அமருகையில் நபர்களின் மொத்த எண்ணிக்கை 15. சன் வேறு, என்னப்பா சனத்தையையே காணம்? என்றான். நான் மகேஷ்பாபு படங்களை முன்பாக தட்டுக்களில் தான் பார்ப்பேன். பையனும் அதுபோலவே மகேஷ் ரசிகன். முதலாக மகேஷ் படத்தை தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டவனை அழைத்துச் சென்று எனக்கும் கூட்டமில்லாதது வருத்தம் தான்!
 
இது தாண்டா போலீஸ்! (இந்த மூனு சுழி டைட்டில் போட்ட போதும் வந்தது) மகேஷ் அறிமுக காட்சி சண்டை ஒன்றே போதும்டா போலாம்னு இருந்தது! மாமன் வேற படத்தை ரிலீஸ் அப்பவே (வியாழன்) பாத்துட்டாரே!

-மாப்ளே உங்காளு படத்தை பாத்தன் மாப்ளே! பையன் நல்லா ஒரு அடி கூட படாம ஆட்களை சாத்துறான் மாப்ளே!

-அது தெலுங்கு டப்பிங் படம் மாமா.. சண்டெ பாட்டு பாட்டு சண்டென்னு தான் இருக்கும்!

-ஆமா மாப்ள.. கமல் ராசு புள்ள கூட இடுப்பை பயங்கரமா ஆட்டி ஆட்டி அந்தப் பய கூட ஆடுச்சு! வயசாயி போச்சேன்னு கவலெ கூட வந்துடுச்சு மாப்ளே!

-அவ்ளோதானா மாமா.. நான் நாளைக்கி தான் போகலாம்னு இருக்கேன்!

-போயி பாரு மாப்ள! அடி ஒன்னொன்னும் இடி மாதிரி இறக்குது அந்த தம்பி! ஆட்டம் பாட்டமெல்லாம் பயங்கரம்! இனிமேட்டு அந்தப்பய படம் வருதுன்னா ஒரு தகவலெ சொல்லிப்போடு மாப்ளே!

இடைவேளைக்கு பிற்பாடு கொஞ்சம் நாடகத் தன்மை தட்டுப்பட்டாலும் ஒன் மேன் ஆர்மியாக மகேஷ் இருக்க கவலை ஏன்? ஒரே அடியில மைண்டு ப்ளாக் ஆயிடணும்! மகேஷ் படங்கள்ல அது தொடர்ந்துட்டே இருக்கு!


000

Post Comment