செவ்வாய், ஏப்ரல் 26, 2016

வயசுக்கு வந்தவீங்களுக்கு!- தெனமும் எனக்கு பயங்கரமான கனவு வருது பழனிச்சாமி! என்னா பண்றதுன்னே தெரியில!, என்றான் சுப்பிரமணி.

-என்ன தாண்டா கனவு அது? சொல்லித் தொலை!

-சில்க் சுமிதா தெரியுமா? நேத்து ராத்திரி யம்மான்னு கமல்ராசோட யம்மா போட்டாங்கள்ல?

-அட அவங்க செத்துச் சுண்ணம்பா போயிட்டாங்கடா! பாவி.. பேயி படங்களை பாக்காதேன்னு சொன்னேன் அப்பும்!

-சில்க் சுமிதா தெனமும் யம்மா ஸ்டைல்ல ட்ரஸ்ஸே இல்லாம என்னோட ரூமுக்குள்ள வந்துடறா!

-சந்தோசம் தானே! இதுல பயங்கரம்னு சொல்ல என்ன இருக்கு?

-உனக்கு ஒரு மசுரும் தெரியாது. அவ வர்றப்ப எல்லாம் கதவை இழுத்துச் சாத்துறா படார்னு உள்ளுக்குள்ள! அந்த சத்தத்துல நான் முழிச்சுக்குறேன்!


000

வெகு நாளாக சுமதிக்கு ஒரு பேசும் கிளி வளர்த்த ஆசை! சமீபத்தில் பழனிச்சாமியை அவன் மனைவி இல்லாத நேரத்தில் சந்திக்க அவன் வீடு சென்ற போது கூண்டிலிருந்த கிளி, “வாங்க வணக்கம்என்றது. ஆசை அளவு கடந்தே சென்று விட்டது அவளுக்கு! அவள் கட்டேன் ரைட்டாக சுப்பிரமணியிடம் பேசும் கிளி வேணும்டா! என்று சொல்லி விட்டாள்.

சுப்பிரமணி லோலாயம் பிடிச்சவன் என்றாலும், அவனுக்கு தோழர் வில்லனா சமீபத்துல நடிச்ச படம் பிடிக்கலைன்னாலும், கொள்கைல இருந்து மாறாதவன் தானே! போராட்ட குணம் பெற்ற ஒரு பேசும் கிளி ஒன்றை சந்தையில் வாங்கி வந்து வீட்டில் வரவேற்பறையில் மாட்டி விட்டான். அது யார் வீட்டினுள் வந்தாலும்.’போராடுவோம் வெற்றி பெறுவோம்! போராடுவோம் வெற்றி பெறுவோம்! சலங் சலங் சலங்!’ என்றே கத்தியது. அவனுக்கு அந்த சலங் சப்தம் மட்டும் இடைஞ்சலாக இருந்தது. இருந்தாலும் வெற்றியை நோக்கி பேசுகிறதே என்று  விட்டு விட்டான்.

எந்த நேரமும் காதில் கேட்டு கடுப்பான சுமதி பொட்டென அதன் மண்டையில் சட்டுவத்தால் ஒன்று வைத்தாள். அது கபாலென உயிரை விட்டு விட்டது போல படுத்துக் கொண்டது. அதன் மீது ஒரு கர்ச்சீப்பை போர்த்தி விட்டு விட்டாள் சுமதி.

பொழுது சாய வந்த சுப்பிரமணி செத்துப் போச்சாட்ட இருக்குது கிளின்னு கூண்டை நீக்கி கர்ச்சீப்பை விலக்கினான். இவனைப் பார்த்ததும் ஒரு கண்ணைத் திறந்த கிளி அவண்ட்ட கேட்டுச்சு, “தோழ்ரெ! தோழ்ரே! அந்த அசிங்கமான பாசிசவாதிக போயிட்டாங்களா?’

000

சுமதிக்கு அப்போது தான் திருமணமாகியிருந்தது. அவளோ கிராமத்து குயில். தாம்பத்ய ருசி அறியாத பேதை அப்போது அவள். அவள் ஒரு அப்பாவியாகத்தான் கிராம வீதியில் சுற்றியவள். அவியம்மா அவளை தோட்டத்துப் பக்கமாக கூட்டிப்போய் அங்கே சேவல் ஒன்று பெட்டைக்கோழியை அழுத்துவதைக் காட்டினாள்.

சாமி இன்னிக்கி உனக்கு முதலிரவு. இப்படித்தான் ஏறக்குறைய எதோ நடக்கும். நீ தயாராயிருஎன்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.

அன்று இரவு ஆசையுடன் சுப்பிரமணி முதலிரவு அறைக்குள் நுழைந்தான். சுமதி படுத்திருந்த கோலம் கண்டு மிரண்டு போனான். பிறந்த மேனியாய் படுக்கையில் படுத்திருந்தாள் சுமதி. ஆனால் அவள் தலையில் சோறாக்கும் சட்டியை கட்டியிருந்தாள் ஹெல்மெட் போல்!

-ஏன் இந்தக்கோலம் சுமதி?

-இங்க பாருங்கொ! என்னை என்ன வேணா பண்ணிக்கோங்க. ஆனா சேவலை போல தலையில கொத்துற வேலை மட்டும் வேண்டாம். ஆமா சொல்லிட்டேன்!

000 

Post Comment

புதன், ஏப்ரல் 20, 2016

மரப்பல்லி நாவலிலிருந்து ஒரு அத்தியாயம்


மரப்பல்லி 

  வாழ்க்கை கடல் நீர் போல உப்புக் கரிக்கிறது. அதில் வாழும் உயிரினங்கள் நமக்கு பரிச்சியம் அற்றவைகளாக உள்ளன. கடல் பரந்து விரிந்திருக்கிறது வாழ்க்கை போல. கடலில் மூழ்கிப் போவதை கற்றுக் கொள்ளாமல் ஒவ்வொருவரும் தவித்து தப்பித்துக்கொள்ள நீச்சலடிக்கிறோம். இதனால் வாழ்வில் அனுபவிக்க வேண்டியனவற்றை தவற விட்டுவிட்டு நீச்சலடித்துக் கொண்டே இருக்கிறோம்.

  ஜெனி உங்களின் அதீத காதலில் நான் வீழ்ந்தேன். நான் நீச்சலடிப்பதை நிறுத்திவிடுகிறேன். நிதானமில்லாமல் நான் வந்திருந்தேன் என்றால் உங்களை தவற விட்டிருப்பேன். உங்கள் கண்களில் காதலின் கண்ணீர் சொட்டுக்கள் சிதறியதை நான் கண்டு கொண்டேன். வாழ்க்கைக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா ஜெனி? பெயரே இல்லாமல் போனதால் தான் அதை நாம் வாழ்க்கை என்கிறோம். அதனால் தான் நாம் மெளனம் என்கிறோம் வெறும் மெளனத்தை. மெளனத்தில் ஒன்றுமே இல்லை.

  உங்களின் பரிதவிப்பில் நான் அன்பைக் கண்டேன். அது சரணாகதி அடைவதை விட உயரமானது ஜெனி. சரணடைவது மனதை பொருத்தமட்டிலும் சரியானது. அன்பு இதயத்தில் இருந்து தோன்றுவது. அவனை காதலித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து காதலிப்பதில் காதலே இல்லை. அது வெற்றி பெற்றாலும் பயன் ஒன்றுமே இராது. காதல் வசந்தம் வருவது போல தானே வரும். அப்படி வருகையில் பூக்களும் வாசனைகளோடு நம் முன் வரும்.

  ஒரு அழகான ஆணைப் பார்க்கையில் அவன் வெறும் எலுப்புக் கூடாக தெரிவதாக சொன்னீர்கள் ஜெனி. என்னாலும் அப்படியே ஆண்களை பார்க்க முடியும் என்றும் கற்றுத்தருவதாகவும் கூறினீர்கள். நிஜமாகவே சதை தான் நம்மை மூடியுள்ளது. சதையில் இருந்து தான் அழகு தெரிகிறது. சதை இல்லாவிடில் அனைவருமே எலும்புக்கூடுகள் தான். எலும்புக்கூடுகளை யாரும் ஆசைப்படுவதில்லை. எலும்புக்கூடுகளை யாரும் ரசிப்பதில்லை. எலும்புக்கூடுகளுக்கு மார்பகங்களும் யோனியும் இருந்தால் அவைகளும் ரசனைக்குரிய பொருளாகிவிடும்.

  உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் சிறு வயதிலிருந்தே வாழ்ந்து வந்திருக்கிறீர்கள் ஜெனி. இதற்கெல்லாம் காரணமாய் உங்கள் தந்தை ஒருவர் தான் என்று சந்தோசமாய் சுட்டிக் காட்டினீர்கள். புகைப்படத்தில் இருந்த உங்கள் அப்பாவின் உருவம் அவ்வப்போது உங்களிடம் பேசும் என்றீர்கள். பயம் என்ற உணர்வை சிறுவயதிலிருந்தே மறக்கடிக்க அவர் பல்லிகளையும், பூரான்களையும் உங்கள் கையில் ஏற்றி ஊர்ந்து செல்ல விட்டதாக கூறினீர்கள். இப்படி ஏன் உங்களை அவர் வளர்த்தார் என்பதற்கான காரணங்களை நீங்கள் தேடவே இல்லையா ஜெனி?

  உங்களின் முழு வாழ்க்கையையுமே நீங்கள் என்னிடம் அந்த இரவில் பகிர்ந்து கொண்டீர்கள். உங்களின் மார்பகங்களை பிசைந்து உங்களுக்கு உணர்ச்சியேற்ற தவித்தவர்களின் முட்டாள் தனங்களை நினைத்து அப்போதும் கூட சிரித்தீர்கள். சொந்த அண்ணனே படுக்கையறையில் அருகில் அமர்ந்து உங்களை உசுப்பேற்றும் விதமாக மார்பகங்களை கசக்கி விட்டு எந்த உணர்ச்சியையும் நீங்கள் காட்டாமல் அமர்ந்திருக்க நீ மண்ணாடி?” என்று எழுந்து போனதை நினைத்து சிரித்தீர்கள்.

  உங்களை காதலிப்பதாக வந்தவர்கள் எல்லோரும் காமத்தையே உங்களிடம் தேடிச் சலித்து ஓடிப்போனதாய் கூறினீர்கள். கல்லூரி வாழ்க்கையில் சக தோழன் ஒருவனுடன் ராகம் தியேட்டரில் படம் பார்க்கையில் அவனும் உங்கள் மார்பகங்களில் கையை வைத்து விளையாடி விட்டு, உனக்கு ஒன்னுமே தோணலையா ஜெனி? என்று கேட்ட போது, என்ன தோணனும் மிஸ்டர்? இந்த திரைப்படத்தில் வரும் பெண் போல உடல்கள் உரசிக்கொண்டதும் கண்கள் செருக ம்! ஹா! என்று நான் முனகினால் தான் உன் உறுப்பு கிளர்ச்சியடைந்து நேர் நிற்குமா? நான் முனகி நடிக்காவிடில் அது செத்துப்போன தவளையாக எப்போதும் போல் கிடந்திடுமா? என்று பேசுகையில் அவன் எழுந்து போய் விட்டதாய் கூறினீர்கள்.

  என் ஊரில் ஒரு அறுபத்தைந்து வயது கிழவன் இருக்கிறான் ஜெனி. அவனுக்கு மூன்று கிழவிகள் மனைவியாக. ஒரு நாள் அவனை ஊரார் முச்சந்தியில் வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணை மடியில் அமர்த்திவைத்து தகாத வேலை செய்து கொண்டிருந்தானாம். சாலையில் போனவர் யாரோ பார்த்துப்போய் பக்கத்து வீட்டாரிடம் சொல்லி ஊரே அதிர்ந்துபோய் விட்டது. அந்தக்கிழவன் தன் வாழ்நாளில் எந்த நேரமும் பெண்களிடம் அப்படியே தான் பேசுவான். ஊரில் எந்தப் பெண்ணை பார்த்தாலும், நேத்து ராத்திரி நல்லா செஞ்சீங்களா? என்றே கேட்பான். அப்போது இந்தப் பெண்கள் சிரித்து வைத்து விட்டுப் போவார்கள்.

  அவனுக்கு முழு வாழ்வுமே காமம் தான். காமத்திற்காகத்தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். காமம் அவனை உயிருடன் இன்னமும் பல காலம் வைத்திருக்கும். இருந்து கழியும் வாழ்க்கையை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அடித்தார்கள். அவன் தவறு செய்ததாகவே நினைத்துக் கொள்ளவே இல்லை. திருத்திக் கொள்ளவோ, திருந்தி விடவோ அங்கு ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். இன்னமும் ஊராரோடு தான் வாழ்கிறான். யாரும் அவனை ஸ்டேசனில் ஒப்படைக்கவில்லை. நான்கு தர்ம அடிகளில் திருந்தி விடுவான் என்று நம்பினார்கள். பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளை காத்துக் கொள்ள எந்த நேரமும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொள்கிறார்கள்.

  பேப்பரில் படித்தால் அது செய்தி. அதுவே பக்கத்தில் நடந்தால் அதிர்ச்சி. தனக்கே நடந்து விட்டால்? முருகேசன் என்னை கசக்கி கடிக்கையில் பயந்து விட்டேன் ஜெனி. பயத்தில் நான் உளறினேன். எனக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று நினைத்தேன். இத்தனை கோரமான உலகிலிருந்து நான் ஓடிவிட முயற்சித்தேன். ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனை அத்தனை வெறியுடன் தாக்கினீர்கள் என்பதே தெரியாது எனக்கு.

  உங்கள் தந்தை புகைப்படத்தில் என்னிடமும் பேசினார் ஜெனி. அவர் எனக்கு புத்திமதிகளை ஒன்றும் அள்ளித் தெளிக்கவில்லை. உன்கிட்ட தைரியம் இருக்கா மகளே? என்றார். அது என்னிடம் இல்லை என்பதை ஒரே பார்வையில் அவர் கண்டு கொண்டார். எனக்கு எல்லா இடத்திலும் பயம் சூழ்ந்திருக்கிறது ஜெனி. பேருந்தில் ஏறினால் செல்லும் இடத்திற்கு பத்திரமாய் சென்று சேர்வோமா? என்று ஆரம்பிக்கிறது மெதுவாக. படிப்படியாக அது உயருகிறது.

  வன்னாத்திப்பூச்சி எங்கள் கிராமங்களில் இருக்கிறது ஜெனி. அது பார்வைக்கு அத்தனை அழகானதல்ல. எல்லா காலத்திலும் அது ஊர்ந்து உணவு தேடியே சலிக்கிறது. அதை யாரேனும் துன்புறுத்தினால் எதிராளியை நோக்கிப் பீய்ச்சியடிக்கிறது. சாதாரண நீர் போல இருக்கும் அது நம் உடலில் பட்டால் கொப்புளங்கள் வந்துவிடுகிறது. இப்படி வன்னாத்திப்பூச்சி மட்டும் அல்ல ஜெனி. டிஸ்கவரி சேனலில் காட்டுகிறார்கள் எத்தனையோ விலங்குகள் தங்களை காத்துக் கொள்ள பயங்கர விஷத்தைக்கூட பீய்ச்சியடிக்கின்றன. என் போன்ற பெண்களுக்கும் அப்படியான தற்காப்பு விசயங்கள் தேவைதான் ஜெனி. சக மனிதனே துன்புறுத்துவான் என்றால் என்னிடம் இயற்கையாகவே அவனை வியாதியுறச் செய்வதற்கு உமிழ்நீர் சுரக்க வேண்டும்.

  நீங்கள் கம்பெனியில் இருந்தீர்கள் சமயத்தில் ஆயிற்று. எந்த நேரமும் என்னை காத்துக் கொண்டே இருப்பது நடவாத காரியம் தான். சாலையில் ஒவ்வொரு ஆணின் பார்வையும் என்னை கூர்ந்து நோக்குகையில் என் உடலில் தீ எரிகிறது ஜெனி. தீ எரியும் உடலை எவனோ ஒருவனுக்குத்தான் விருந்தாக வைக்க வேண்டும் என்று நினைக்கையில் அது இன்னமும் கொடூரமானதாக இருக்கிறது. ஜெனி இந்த உணர்வுகளில் இருந்து சீக்கிரம் நான் விடைபெற வேண்டும். சக மனிதனை எலும்புக்கூடாக கண்கள் என்ற இடத்தில் ஒரு துவாரத்தை மட்டுமே நான் பார்ப்பதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படியான சக்தியை உங்கள் தந்தையின் புகைப்படமே எனக்கு கற்றுத்தரும் என்று நம்புகிறேன்.

  ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் காலமாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பிட்ட மாற்றங்களை நாம் சந்திக்கும் போது நாமும் மாறிவிட வேண்டியது இயற்கையாகி விடுகிறது. காமம் வேண்டுமென யாரும் பதினான்கு வயது வரை கேட்பதில்லை. அதற்கும் மேல் உடலே அதற்கு தகுதியானதாகி விடுகிறது. யார் தீண்டினாலும் கொதிப்படைய ஆரம்பித்து விடுகிறது. நாம் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை. அதுபற்றி உணரும்போது காலம் கடந்து விடுகிறது. நடந்தனவற்றை பின் எப்போதும் மாற்ற முடிவதில்லை.

  காம உணர்வு குழந்தைத்தனமானது. தவிர தற்காலிகமானதும் கூட. ஆணிற்கு விந்து வெளியேறி விட்டால் காமம் ஓய்வுக்கு வந்து விடுகிறது. வயது ஆக ஆக காம உணர்வும் தன் பிடியை தளர்த்திக் கொள்கிறது. இது துக்கமான விசயமாகி விடுகிறது. வயது கூடுகையில் யாரும் நீங்கள் அழகாக இருக்கிறீகள்! என்று வார்த்தையை பரிமாறிக் கொள்வதில்லை! வாழ்க்கை ஒரு ஏக்கமாக மாறிவிடுவதால் உபயோகப்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட செல்போனின் நிலைக்கு வந்து விடுகின்றனர். இனி கிறுக்குத்தனங்களை ஆரம்பிக்கின்றனர். ஆண்கள் விக் வைத்தும், டை அடித்தும் மீதி நாட்களை வாழ முயற்சிக்கின்றனர். பெண்கள் தொந்தியை கரைக்க மின்சார பெல்டுகளையும், முகச்சுருக்கங்களை மறைக்கவும், ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவும் தலைப்படுகிறார்கள். சிலர் பட்டினி கிடந்து விட்டு டயட்என்கிறார்கள்.

  யாரேனும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மார்பகங்கள் வளருகின்றனவா? யாரேனும் பார்த்து ரசிக்கவே உடை வகைகளை அணிவதாக நினைத்துக் கொண்டவர்கள் தானா நெருங்கி வந்து கட்டியணைக்கிறார்கள்? இது வெறும் உடலியல் அடிமைத்தனமாக இருக்கிறது ஜெனி. இதைத் தாண்டினால் வருவது ஒருவேளை அது நிஜமாகவே காதலாய் இருக்கலாம். அதைத்தான் நான் உங்களிடம் உணர்ந்தேன் ஜெனி.

  சண்டை, சமாதானம், பொறமை, எரிச்சல், அழுகை, பரிசு, இருட்டு, தடவல் என்று காதலில் எல்லா துன்பங்களும் இருக்கிறது ஜெனி. போயும் போயும் எல்லாம் ஒரு ஆடவனோடு என்றிருக்கையில் எனக்கு அதில் ஒன்றும் இருக்கப் போவதில்லை என காட்டி விட்டீர்கள்.

  இரண்டு வருடங்களுக்கு முன்பு அன்று உள்ளூரில் திருவிழா என்று நினைக்கிறேன் ஜெனி. கற்பு கற்பு என்று சொல்கிறார்களே அதை நான் அன்று பனி பெய்யும் இரவில் நட்ட நடுக் காட்டில் உறவுக்காரன் ஒருவனிடம் இழந்தேன். ஐந்து நிமிடத்தில் என்ன நடந்தது என்றே உணர்வதற்குள் அவன் மூச்சு வாங்கிக்கொண்டு எழுந்து தன் பேண்ட் ஜிப்பை மேலேற்றிக் கொண்டான். என்னைச்சுற்றிலும் ரத்தவாடை வேறு வீசிக்கொண்டிருந்தது. தூரத்தில் கோவில் திருவிழாவுக்காக ஆர்கெஸ்ட்ரா நடந்து கொண்டிருந்தது. என்னைப்போல திருட்டு உறவுக்கு சென்றவர்களெல்லாம் இருட்டில் முகம் மறைத்து குனிந்து வெட்கப்பட்டபடி இட்டேறியில் போய்க்கொண்டிருந்தார்கள்.

  என் யோனியை பாவாடை கொண்டு மூடிவிட என் கைகள் போகவில்லை. நானும் என் யோனியும் பனியில் குளித்தோம். உறவுக்காரன், போலாம்  எந்திரிடி! என்றான். சற்று முன்தான் ஏகப்பட்ட கெஞ்சலோடு செல்லம் செல்லம் என்றவன் அவன். ஏனோ என்னை டி போட்டு போலாம்டி என்றான். நல்லா இருந்துச்சாடி? அதான் கிளம்ப மனசில்லையா? என்று வேறு கேட்டான் அவன். தவிர பூச்சி பொட்டு வந்து விடும் கிளம்பு என்றான்.

  அவன் ஏதோ காரியத்தை செய்து முடித்து விட்ட திருப்தியில் வீடு போகும் அவசரத்தில் இருந்தான். எனக்கோ இங்கு என்ன காரியம் நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. என்னை பயன்படுத்திய அவன் உறுப்பு என்ன தடிமனில் இருந்தது? அதை ஏன் சீக்கிரம் எடுத்துக் கொண்டான்? என் யோனிக்கு என்னவாயிற்று. புணருகையில் சந்தோசத்தை அவன் முகம் காட்டியதா? இந்த பனி இரவில் எதுவும் எனக்கு தெரியவில்லை.

  அவனுக்கான காரியம் முடிந்து விட்டதும் என்மீதான பற்றுதல் போய்விட்டது அவனுக்கு. அதற்கு காரணம் நானுமல்ல அவனுமல்ல! அவனது குறி. அது என்னையும் அவனையுமே ஏமாற்றி இருக்கிறது. ஜெனி உலகில் நடக்கும் கொடூரங்களுக்கெல்லாம் காரணமாய் ஐந்து நிமிடம் விரைப்பேறிய குறிகளே தான் காரணமா? ஒருவார காலம் அவன் இதற்குத்தானா ஆசைப்பட்டான்? வெறும் ஐந்து நிமிடங்களுக்காக? இதில் அவனும் எந்தவிதமான திருப்தியையும் கண்டது மாதிரி அவன் பேச்சும் இல்லை. அந்த இரவில் எதுவுமே அங்கு நிகழவில்லை. என்ன நடக்கிறது என்பதை உணருவதற்குள் இங்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல அவன் எழுந்து கொண்டான். எழுந்ததும் வீடு போகலாம் என்று அவன் சொல்லும் போது செத்தும் விட்டான் என்னைப் பொறுத்தவரை.

  காதலோ இல்லை வேறுவிதமான பற்றுதல்களோ கடைசியாய் சென்று முடியும் இடம் யோனியாய் இருக்கையில் அந்த சுகம் சாவுக்கு இணையாக இருக்க வேண்டும் ஜெனி. என்னை யாரும் சாகடிக்க முயற்சி எடுக்கவே போவதில்லை. என்னை சாகடிக்க பனி இரவில் கூட்டி வந்தவன் வந்த ஐந்து நிமிடத்தில் செத்து அவன் திருப்தியாகிவிட்டான். என்னை அவன் சாகடிக்க முயற்சிக்கவே இல்லை. அவன் சாவு மட்டுமே அவனுக்கு குறியாய் என் மேல் படர்ந்து இயங்கி எழுந்து விட்டான். நான் என் செருப்பை அந்த இரவில் கை வைத்துத் தேடி தலைமாட்டுக்கு மேலிருந்து கையில் எடுத்தேன். எடுத்ததும் என் தலையில் பொத்துப் பொத்தென அடித்துக் கொண்டேன் ஜெனி. எனக்கு என்மீதே அவ்வளவு சங்கடமாய் இருந்தது.

  நீ வந்தா வா இல்லாட்டி இங்கியே கிடடி லூசு! என்றவன் மானம் என்ற ஒன்று தனக்கு இருப்பதாகவும் அது கப்பலேறிப் போய்விடும் என்றும் பினாத்திக் கொண்டு தன் செருப்பைத் தொட்டுக் கொண்டு சென்றான். அவ்வளவுதான் அவன் காதல். நல்லவேளை இவனைக் கட்டிக் கொள்ளத்தான் வீட்டில் அம்மா எந்த நேரமும் படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருந்தாள். இவனுக்கு சம்மதம் சொல்லியிருந்தால் காலம் முழுவதும் ஒவ்வொரு இரவிலும் இவன் சாவை மட்டும் மனதில் கொண்டு நீட்டிய குறியுடன் வருவான். என்னைப்பற்றி எந்தக் கவலையும் இவனுக்கு இருக்கப்போவதில்லை.

  வாழ்க்கை என்னிடம் என்ன தந்ததோ அதை நான் அனுபவிக்கவே இல்லை.அதில் ஏதோ சிறந்தது இருக்கும் போல என்று தான் அந்த இரவிலும் உள்ளக் கிளர்ச்சியுடன் பயப் போர்வையை தூக்கி வீசி விட்டு வந்தேன். ஆனால் கொட்டிப்போன பாலுக்காக அழுவது வீண் தான் ஜெனி. அது நமக்கு திரும்பக் கிடைக்கப் போவதில்லை. வாழ்வுக்கான அடிப்படை விசயமே நம்பிக்கை தான் ஜெனி. அது அங்கு இல்லை.

  நான் இரவில் கைகோர்த்து அவனுடன் பயணப்பட்டது நம்பிக்கையின் மையவேருடன் தான். அந்த நம்பிக்கையை அவன் ஏமாற்றி விட்டான். இவனல்ல. யாருமே அப்படித்தான் செய்வார்கள் போலிருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் ஜெனி! அவன் தோற்றுப்போனது அவனுக்கே தெரிந்து விட்டது. தன்னை வீரன் என்று நினைத்து இருளுக்கு இழுத்து வந்தவனால் அவன் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவன் ஓடிவிட்டான் ஜெனி. நான் தனித்து அங்கே எவ்வளவு நேரம் கிடந்தேனென்றே தெரியவில்லை. அன்றே நான் என்னை பனியால் கழுவிக்கொண்டேன்.

  அதன் பின் என்னிடம் காதலைச் சொல்ல வந்தவர்களை என்னால் எதையேனும் நினைத்துக் கொண்டுகூட பார்க்க முடியவில்லை. அவர்கள் நிம்மதிக்காக மட்டுமே காதலிப்பதாக என்னிடம் வருவதாகத்தான் தோன்றியது. எனக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் தர யாரும் தயாராக இல்லை. என் சம்பளப் பணம் குறைந்தால் அம்மா கூட என்னை காதலிப்பதில்லை. உன்னை நம்பி பிரிட்ஜ், வாசிங் மெஷின், டிவி என்று வீட்டில் வாங்கிப் போட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் உன் அப்பனா காசு நொட்டுவான்? என்கிறது. இதற்கெல்லாம் அழுது கொண்டிருக்கக் கூட எனக்கு நேரமே இல்லை போல இருக்கிறது ஜெனி.

  இந்தப்பறவை இனங்களெல்லாம் தன் நீண்ட மூக்குகளால் என்னை கொத்திக் கொண்டே இருக்கின்றன. வலி உணராத மிருகமாய் நான் மாறியிருக்கிறேன். ஜெனி தொடர்ந்து என்னை காதலிப்பீர்களா? என் கண்ணீரை துடைத்துவிட உங்கள் கைகள் எப்போதும் அருகில் இருக்குமெனில் நான் மிச்ச வாழ்வை நிம்மதியாய் கழிப்பேன். இந்த உறவுகள் இதுநாள் வரை எனக்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை. இனியும் அது செய்யப் போவதும் இல்லை. எவனோ ஒருவனுடன் அனுப்பி வைத்துவிட்டு பிள்ளை குட்டி பெற்று வாழ்வதில் வாழ்க்கை இருப்பதாய் இந்த உறவுகள் நம்பிக் கொண்டிருக்கின்றன. என்னுள் எங்கோ மறைந்து கிடந்த திரியைக்கிள்ளி உயர்த்தி பற்ற வைத்திருக்கிறீர்கள் ஜெனி.

  உங்களின் முத்தம் எனக்கு இனித்தது.

  உங்களின் வருடல் எனக்கு சுகமளித்தது.

  உங்களின் அணைப்பு தாயின் அரவணைப்பை விட மிருதுவாக இருந்தது.

  உங்களுக்கு என்னை தின்னக்கொடுத்ததில் சாவை நெருங்கி முத்தமிட்டு வந்தேன்.

  உங்களை கட்டி அணைத்ததில் எனக்கு பயமோ தயக்கமோ இருக்கவில்லை.

  என்னை உங்களுடன் புதைத்துக் கொள்ள முயற்சிக்கையில் நானும் அதற்குத்தான் போராடிக் கொண்டிருந்தேன்.

  இருவரும் இணைந்து காமத்தைக் கொன்றோம் ஜெனி. காமத்தைக் கொல்ல இருவருமே சண்டையிட்டோம். இறுதியில் இருவருமே வென்றோம்.

  ஊரில் நாற்பத்தைந்து வயதுக்காரன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி இறந்து வருடம் ஒன்று ஓடிவிட்டது. வெளியூரிலிருந்து தனக்கே தனக்கென ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணைக் கூட்டி வந்தான் அவன். அவனது நெருங்கிய நண்பன் உள்ளூரில் சைக்கிள்கடை வைத்து பிழைப்பு ஓட்டிக்கொண்டிருந்தான். அந்தப்பயலுக்கும் மனைவி இறந்து வருடம் ஒன்றாகி விட்டது. திருமணத்திற்கு ஒரு பெண் தயாராக இருந்தாள் அவன் வீட்டில். கூட்டி வந்த பெண்ணை அவன் வீட்டில் தங்க வைத்து விட்டு ஊருக்குள் அவன் வீடு வீடாகப் போய் காலையில் எனக்கு திருமணம் நம் விநாயகர் கோவிலில் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

  ஊராரும் அவன் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி காலையில் கோவில் முன் கூடினார்கள். திருமணம் சைக்கிள் கடைக்காரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடந்தது. காத்திருந்தவன் பெண்டாட்டியை சைக்கிள் கடைக்காரன் தட்டிக்கொண்டான். கூட்டி வந்தவன் ஏக கலாட்டா செய்தான். அந்தப்பெண் அத்தனை கூட்டத்தில் அவனைக் கேட்டது இதுதான்.

  “நீ போடற சோத்துக்கும், உடுத்திக்க குடுக்குற துணிக்கும் நம்பியாடா நானு உங்கூருக்கு உன்னோட வந்தேன்?”

  அந்த வார்த்தைகள்ல் எல்லாம் முடிந்து போனது ஜெனி. அந்த வார்த்தைகளுக்குள் பல விசயங்கள் ஒளிந்திருந்து கண்ணாமூச்சி விளையாடுவதாய் எனக்கு தோன்றியது. இப்போது அந்தப் பெண்ணும் சைக்கிள் கடைக்காரனும் சந்தோசமாய்த்தான் வாழ்கிறார்கள். முதல் மனைவிக்குப் பிறந்த பெண் அம்மா என்று தான் புதியவளை அழைக்கிறது.

  பார்க்கப்போகையில் ஒரே ஒரு கிராமத்தில் எத்தனை விசயங்கள் புதைந்திருக்கிறது! கட்டிக் கொடுத்த ஊரில் பிழைக்க முடியாமல் பத்தே நாளில் தாய் வீட்டுக்கு ஓடி வந்த பெண் என் தோழிதான் ஜெனி. பத்தே நாளில் ஓடிவர அவளுக்கு ஒரே ஒரு காரணம் போதுமானதாய் இருந்தது. அவள் கணவன் இரண்டு லட்சம் கடன்பட்டிருந்தானாம் ஒரு புள்ளியிடம். கடனை திருப்பித் தரவே வேண்டாம் நீ, ஆனால் உன் புது மனைவியை என்னிடம் ஒரு நாள் மட்டும் அனுப்பு என்று அந்தப்புள்ளி கேட்டுக் கொண்டதற்காக இவளிடம் கணவன் பேசியது, ஒரே ஒரு முறை போய் வந்தாயானால் நம் துன்பம் நீங்கிவிடும் கண்ணே!

  இந்தப்பெண் ஓடி வந்து வீட்டில் சொல்லி அழ ஆரம்பித்து விட்டது. இங்கிருந்து ஊரே லாரியில் போய் அவள் கணவனை துவைத்து போட்டுவிட்டு வந்து விட்டது. ஜெனி ஏன் இந்த மாதிரியான கொடூரங்கள் நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது? யாரை நாம் குறை சொல்வோம் இதற்காக?

  ஒரீசாவிலிருந்து பிழைக்க வந்த பெண்களும் ஆண்களும் இங்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள்! அந்தப் பெண்கள் கம்பெனியில் பேசும் தமிழ் நாம் பேசுவதை விட அழகாய் இருக்கிறது. அவர்கள் ஊரில் வாசலில் சாணி தெளித்து கோலம் போடும் பழக்கமே இல்லையாம். புதிதாக அவர்கள் அதை கற்றுக் கொண்டு தங்கள் வாசலிலும் கோலம் போடும் அழகு தனிதான் ஜெனி. அவர்கள் தமிழர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூரில் அவர்களும் வாழத்துவங்கி விட்டார்கள். அவர்கள் சகமனிதர்களாகத் தான் நம்மைப் பார்க்கிறார்கள். உண்மையான நேசத்துடன் தான் அக்கம்பக்கம் பழகுகிறார்கள். என் அம்மா கேட்டது ஒருநாள். இவளுக ஏன் இப்புடி செவப்பா இருக்காளுக!

  ஜெனி நீங்கள் உங்கள் அன்பை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்குக் கொடுத்தீர்கள். அதற்கு நான் நன்றியுடையவளாக இருக்க வேண்டும் என்று கூட நீங்கள் எதிர்பார்க்கவில்லை. பயத்தினால் எங்கும் காதல் தோன்றுவதே இல்லை ஜெனி. ஆணின் மீதான என் முந்தைய காதல் பயத்தினால் தான் தோன்றியது.

  எங்கே அவன் இழுத்த இழுப்புக்கு நான் போகவில்லை என்றால் கோபித்துக் கொண்டு போய்விடுவானோ என்ற பயம் இருந்தது. தவிர அம்மா அப்பாவின் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டு விடுவேனோ என்ற பயமும் இருந்தது. நாம் அன்பைப் பரிமாறிக் கொண்டபோது எல்லாமே வித்தியாசமாக இருந்தது உண்மைதான் ஜெனி. வாழ்வின் அழகான தருணம் அதுதான். உங்களது மார்பகத்தில் நான் முத்தமிடுகையில் கூச்சமோ, பயமோ இல்லை ஜெனி. எனக்கான பொருளை குழந்தையின் ஆசையோடு நாம்பிப் பிடித்து குருத்தில் முத்தமிட்டுக் கடித்தேன். ஜெனி அவைகள் என்னுடையவைகள் தானே என்றுமே?

  ஆணின் காதலில் நான் விழுந்திருந்தால் அவன் இந்த நேரம் என்னை சங்கிலியில் பிணைத்திருப்பான். சிறைக்குள் தள்ளியிருப்பான். என்னோட ஆள் என்று பகிரங்கமாக அறிவிப்பான். மார்பை நிமிர்த்தி மீசையை தடவிக் கொள்வான். முதலில் என் எல்லா சங்கிலிகளையும் உடைத்து வீசினீர்கள் ஜெனி. இவ்வளவு சுதந்திரமாக இருப்பது கூட அழகு தான். சுதந்திரம் அன்பைவிட பெரியது ஜெனி. குழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும். கண்ணாடி டம்ளரை உடைக்கத்தான் செய்யும். நீங்கள் என்னை உடைத்து விளையாடினீர்கள். நானும் அதே விளையாட்டில் குழந்தைமையோடு பங்கெடுத்தேன்.

  யாரிடமேனும் அன்பு இல்லாமல் இருந்தால் அவர் அன்பளிப்பாக எதையும் பிறருக்கு கொடுக்க மாட்டார் தானே! எல்லாம் கொஞ்சம் நேரம் தான் ஜெனி. நீங்கள் என் உதட்டில் இட்ட முதல் முத்தம் ஒன்றே சொன்னது உங்களிடம் தேவைக்கு அதிகமான அன்பு இருப்பதையும் அதில் பாதியை எனக்கு தர விரும்புவதையும்! ஜெனி நீங்கள் என்னை நரகத்திற்கு கூட்டிச் சென்றாலும் உங்களுடன் நான் வருவேன். உங்களின் அழைப்புக்காக எந்த நேரமும் காத்திருப்பேன்.

  தள்ளி நின்று பார்க்கையில் இங்கு எதுவோ நடந்து கொண்டிருக்கிறது ஜெனி. காலையில் நிம்மதியாக குப்புற படுத்து போர்வையால் இறுக்கி மூடி தூங்கும் குழந்தையை விடிந்து விட்டது என்று எழுப்புகிறார்கள். அதேபோல் இரவில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் குழந்தையை நேரமாச்சு படுக்கப்போ, என்று மிரட்டி படுக்க வைக்கிறார்கள்! ஏன் இப்படியே நடந்து கொண்டிருக்கிறது கால காலமாக?

  சமூகம் சமூகம் என்கிறார்கள். சமூகமே தயார்படுத்துகிறது அடங்கி வாழ. சமூக பழக்க வழக்கங்களிலும், மதிப்பிலும் அக்கரையாக இருக்க வேண்டுமென சொல்கிறது. அதுவே பின் ஆட்டிப்படைக்கிறது. மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் அடிமைப்படுத்துகிறது. பலதுன்பங்களையும் அதுவே கொடுக்கிறது. அதற்கும் மதிப்பு கொடுத்து வாழ்ந்தால் முழுமையாக மதிக்கிறது. சுதந்திரமாக இருக்க விரும்பினால் அது கோபமடைந்து தூற்றுகிறது.

  காதலில் ஓடிப் போனவளை ஓடுகாலிக் கழுதை என்கிறது. காதலில் ஓடுபவர்கள் சமூகத்தை மதிப்பதில்லை. சாதிகளை மதிப்பதில்லை. கட்டுப்பாடுகளை உடைத்து விட்டு ஓடி வேறு சங்கிலிகள் பூட்டிக் கொள்கிறார்கள். அது ரெண்டும் கெட்டான் நிலை தான். அடுத்தவர்களின் அபிப்ராயங்களை சேர்த்து வைக்காமல் தூக்கி வீசிவிட்டால் பயம் காணாமல் போய் விடும்.

   உங்கள் அறையில் நான் நிம்மதியாகத் தூங்கினேன் ஜெனி ஒரு பூனையைப்போல. எங்கள் வீட்டில் வளரும் பூனை மிக நிம்மதியாக டிவியின் மேல் மாலை நேரத்தில் கால் நீட்டி சுகமாய் தூங்கும். அதற்கு எந்த பயமும், கவலையும் இல்லை. அதை நான் பலமுறை பொறாமைக் கண்களோடு பார்த்திருக்கிறேன் ஜெனி.

  அதற்காக நான் ஆசைப்பட்டேன். தவிர இரவு உணவை நாம் இருவருமே ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக அமர்ந்து உண்டோம். இப்போது யோசிக்கையில் எவ்வளவு இயல்பாய் இருந்தோம் என்று புரிகிறது ஜெனி. இப்போது உங்களை இழந்து இந்த நேரம் என் வீட்டுச் சிறையில் வழக்கமாக கிடக்கிறேன்.

  ஜெனி ஏதாவது செய்யுங்கள்! எந்த நேரமும் உங்கள் அருகில் இருக்க ஆசைப்படுகிறேன். ஆகவே ஏதாவது செய்யுங்கள். இத்தனை காலமும் உங்களின் அறிவுக்கூர்மையால் தான் உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொண்டு வந்தீர்கள். அது ஒன்றால் இன்னமும் பல பிரச்சனைகளை ஊதித் தள்ளிவிட்டு சிரிப்பீர்கள் ஜெனி. அது உங்கள் தந்தையால் கிட்டிய வெகுமதி.

  இந்த வாழ்க்கையை கூடிய சீக்கிரம் நமக்காகவே சமர்ப்பித்துக் கொள்வோம் ஜெனி!


 000

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 19, 2016

முடிவு நம்ம கையில இல்லீங்க!

முடிவு நம்ம கையில இல்லீங்க!
வா.மு.கோமு

மைதிலி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் என்னவென்ன காரணங்களுக்குத் தான் அரளிக் கொட்டையை அரைத்துக் குடிப்பார்கள் என்ற விபரமெல்லாம் சரிவர தெரிவதேயில்லை. அப்போதைக்கு எது எளிதாக கிடைக்கிறதோ அதை அவர்களின் இறப்பை நிறைவேற்றிவிடுமென தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். போன மாதம் ஒரு முட்டாள் பெண் பக்கத்து ஊரில் சீமெண்ணெயை குடித்து விட்டது. அதுவும் மருத்துவமனை சென்று தப்பித்துக் கொண்டது. அது என்ன காரணத்துக்காக சீமெண்ணெயை தேர்ந்தெடுத்து வயிறு ரொம்ப  குடித்தது என்பது நான் சொல்லப்போகும் சம்பவத்திற்கு சம்பந்தமே இல்லாதது. எனவே அதை விட்டு விடுவோம்.

பொதுவாக கிராமங்களில் பெண்கள் அரளிவிதையை அரைத்து சத்தமில்லாமல் குடித்து விட்டாலும் கூட யாரோ ஒரு நெருங்கிய தோழிக்கோ தோழனுக்கோ தகவலை சொல்லி விடுகிறார்கள். உயிர் என்பதால் சீக்கிரம் விசயம் பரவி தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் வீட்டின் முன்பாக கூட்டம் கூடி விடுகிறது. நாயின் கழிசலை கூசாமல் யாரேனும் கையிலெடுத்து குண்டானில் போட்டு தண்ணீரில் கலந்து வீட்டினுள் நுழைந்து விடுவார்கள். அந்தப்பெண் என்னதான் துள்ளினாலும். வாயை திறக்கவே கூடாதென இறுக்கிக் கொண்டாலும் பயல்கள் விட மாட்டார்கள். எப்படியும் அந்தப் பெண்ணின் வாயினுள் நாயின் கழிசல் கரைசலை ஊற்றி விழுங்க வைத்து விடுவார்கள்.

அந்தப்பெண் சற்று நிமிடத்தில் தன் குடல்களையெல்லாம் வெளியே துப்பி விடுவது போல வாந்தியெடுத்து திரு திருவென முழிக்கும். சன்னமாய் கூட்டம் கலைந்து விடும். பெரும்பாலும் வீட்டில் அம்மா திட்டியது என்றும், காதலனுடன் சண்டை என்றும், தீபாவளிக்கு துணி எடுத்துத் தரலை என்பதற்காகவும் பெண்கள் அரளி விதையை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். சமீப காலங்களில் ஓரளவு தற்கொலைச் சம்பவங்கள் குறைந்து விபத்துகளின் எண்ணிக்கை தான் அதிகமாகி விட்டன.

மைதிலி அரளிக் கொட்டையைத் தான் அரைத்து குடித்து விட்டதாக அவள் பெரியம்மா சொல்லக் கேட்டு ஊரார் தெரிந்து கொண்டார்கள். இருந்தும் அரசாங்க இலவச வேன் கொய்ய்ங் கொய்ய்ங்கென சப்தமெழுப்பிக் கொண்டு ஊருக்குள் வந்து விட்டதுஅரசாங்க மருத்துவமனைக்கு தான் பாடிய கொண்டு போறாங்க! என்று தகவல் சொன்னவன் அவனாகவே முடிவெடுத்து மைதிலியை பாடியாக்கி விட்டான். அதுவேறு எனக்கு கருக்கடையாக இருந்தது. இருக்கும் பிரச்சனையில் இனி இது வேறு.

அந்தம்மா உன் பேரைத்தான் சொல்லிட்டு இருந்துச்சு முருகேசா! நீதான் சித்த முந்திப்போயி அந்தப் பிள்ளையை  மிரட்டி அடிச்சுப் போட்டு வந்துட்டியாமா? நீ அடிச்சங்காட்டி தான் அது  அரளிக் கொட்டையை அரைச்சு குடிச்சுடுச்சாம்ல!’

அடப்பாவிகளா! பாடிங்கறான், சித்த முந்திப்போய் அடிச்சேங்கறான். எப்படி எல்லாம் அரைமணி நேரத்திற்குள் மனிதனுக்கு பீதியாகிறது பாருங்கள். மணி வேறு  மாலை ஆறு தாண்டியிருந்தது. ஒருமணி நேரமாகவே எனக்கு பிரச்சனை மேல் பிரச்சனையாக இருக்கிறது. பள்ளிக்கு சென்றிருந்த மீனாவை வேறு காணோம்.

இந்தப் பட்டிக்காட்டில், அப்படி சொல்ல மாட்டாளே கீதா.. ம்! ஒடக்கான் கூட முட்டையிடாத ஊரில் மனுஷி இருப்பாளா? பொழைக்கத் தெரியாத மனுசன் கூட மனுஷி இருப்பாளாஇப்படி தொட்டதற்கெல்லாம் மனுஷி இருப்பாளா? என்று கேட்டுக் கேட்டே போன வருடம் முடியாது சாமி என்று புகுந்த வீடு போய் விட்டாள் கீதாஆறாவது முடித்து ஏழாவது சென்று கொண்டிருக்கும் மீனாவைக் கூட இந்த ஒரு வருடத்தில் அவள் பார்க்க வரவில்லை. நகரில் அவள் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சென்று வருவதாக அவள் தம்பி ஒருமுறை சொன்னதோடு சரி.

மைதிலி கிராமத்திலிருந்து ஒன்னரை கிலோ மீட்டரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு இருபது குழந்தைகளை கூட்டிசென்று விட்டு விட்டு மாலையில் அதே போல பள்ளிக்குச் சென்று பத்திரமாக உள்ளூர் குழந்தைகளை  வீட்டுக்கு கூட்டி வந்து கொண்டிருந்தாள். காட்டு வேலைக்கு நேரமே அலையும் ஊர்க்காரர்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதற்கான நேரமெல்லாம் கிடையாது. போக பேருந்து வசதியும் இல்லாத ஊர் இது. பேருந்துக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும்.

இப்படி சிறப்பான ஊரில் படித்த பெண்ணான கீதா  எப்படி என்னுடன் குடும்பம் நடத்துவாள்? என் வேலை என்ன என்றே சொல்லவில்லை பாருங்கள்! வேலை இருந்தால் தானே சொல்வதற்கு! பஞ்சு விற்க கிளம்பினால் மழை கொட்டும் என்பது மாதிரி பல வேலைகள் செய்து பார்த்தும் இன்னும் ஒன்றில் கூட உருப்படியாய் இல்லை. இப்போதைக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது மூன்று வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் நான் கணித்த  ஜாதகங்கள் வெற்றி பெறவே ஏதோ வெளியூர் வரை கொஞ்சம் பேருக்கு இப்போது பரவியிருக்கிறது. திருமணப் பொருத்தம் பார்ப்பதில் கைராசிக்காரனாகி விட்டேன். இப்போது தான் ஒரு டிவியெஸ் மொபெட் ஒன்றை மூன்றாம் கையாக வாங்கியிருக்கிறேன்.

வீட்டில் அம்மா போய்ச் சேர்ந்து வருடம் மூன்றாகி விட்டது. அம்மா இருக்கும் வரை வீட்டின் பின்புறமிருக்கும் காட்டில் எதாவது போட்டு வளர்த்திக் கொண்டே இருக்கும். மரம் வளர்ப்பதில் அம்மாவுக்கு ரொம்பவே பிரியம். எலுமிச்சை மரம் மூன்று இப்போது காய்ந்து விட்டது. முருங்கை மரம் ஐந்தாறு உருப்படியாய் நிற்கிறது. அப்புறம் அது செய்த எல்லாமும் பட்டுப் போய் விட்டது. தண்ணீர் ஊற்றக்கூட ஆள் இல்லை. வீட்டுக்கு ஒத்தை ஆள் நான். தனித்துக் கிடக்கக் கூடாதென நினைத்துத் தான் கீதா தன்னோடு மீனாவை கூட்டிப்போகவில்லை போல.

என் டிவிஎஸ்சில் அரசாங்க மருத்துவமனை வந்த போது, எப்படா வருவான்? என்றே காத்திருந்தது போல மைதிலியின் பெரியம்மா என்னை பிடியாய்ப் பிடித்துக் கொண்டாள். மைதிலிக்கு எப்பிடி இருக்கு? என்று கூட கேட்க முடியவில்லை.

என்னால முடியாது சாமி இவளை இனி ஊட்டுல வெச்சிருக்க! நீ எப்ப வந்து அவளை கையை நீட்டி அடிச்சியோ அப்பவே நீயே இவளை கூட்டிட்டு போயி உம்மட ஊட்டுல வச்சிக்கோ! இவ அப்பனும் ஆத்தாளும் செத்த கையோட என் ஊட்டுல வந்து கிடந்தா! சரி பாவம் எங்க போவாள்னு நான் வச்சிருந்தேன். என் பிள்ளைகளை கட்டிக் கொடுத்து தாட்டி உடவே தாவு தீந்து போச்சு எனக்கு. இப்ப என்னடான்னா நீ புள்ளையக் காணமுன்னு  வாசப்படியேறி வந்து இவளை அடிக்கிறே! யாரு கட்டுவா இவளை? நீயே வச்சுப் பொழை!’ அது சத்தம் போட்டுக்கொண்டே போய் விட்டது மருத்துவமனையை விட்டே!

மைதிலி ஒரு பாவப்பட்ட பெண் என்பதால் தான் மாதம் ஒருமுறை ஊராரே ஐம்பது ரூபாயை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மைதிலியின் அப்பாவும் அம்மாவும் ஒரு பேருந்து விபத்தில் இறந்து போனது நான்கு வருடம் முன்பு. அப்படித்தான் இவள் இந்த கிராமத்திற்கு வந்தாள். முப்பது வயதுக்கும் மேலாகக் கூட இருக்கும். பாவம் என்று தான் ஊராரே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவளது பெரியம்மாவுக்கு வீட்டு வேலை செய்ய கூலியில்லாமல் ஒரு பெண் கிடைத்த மாதிரிதான் இவள் வந்து சேர்ந்தாள். எப்படியிருந்தாலும் மீனாவைக் காணோமென்றதும் நேராக இவளைத் தேடித்தான் சென்றேன்.

அவளோ மீனாவை பள்ளியிலேயே காணோமென்றும், அவளது டீச்சரிடம் சொல்லிக் கொண்டு தான் வந்ததாகவும் பேசினாள். இதுவா பதில்? வந்த கோபத்தில் ஒரு அப்பு கன்னத்தில் போட்டு விட்டேன். குழந்தைகளை பத்திரமாய் அழைத்து வருவது தானே இவள்  வேலை.

படுக்கையில் மைதிலி ஒரு உலர்ந்த சருகு மாதிரி படுத்திருந்தாள். என்னைப் பார்த்ததும்  அவள் கண்களில் பொல பொலவென  கண்ணீர் கொட்டியதுபாப்பா கிடைச்சிட்டாளுங்களா ஜோசியகார்ரே! என்றாள். இல்லை என்று தலையாட்டினேன்.

நான் நீங்க அடிச்சதுக்காக இப்படி செய்யலைங்க! பெரியம்மா நீங்க போன பிற்பாடு கண்டபடி என்னை பேசிடுச்சு! அது எப்பயும் பேசும் தான். இருந்தாலும் இன்னிக்கு ஜாஸ்த்தி பேசிடுச்சு! உயிரோட இருக்கறதுக்கு போயி சாவுடின்னு சொல்லிடுச்சு! நீங்க போலீஸ் ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துடுங்க ஜோசியகார்ரே! நானே உங்க வீட்டுக்கு வந்து சொல்லி ஸ்டேசனுக்கு போலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள என்ன என்னமோ நடந்துடுச்சு!’ என்றாள்.

நான் அதுக்குத்தான் வந்தேன் மைதிலி. பொண்ணைக் காணோம்னு ஒரு கோவத்துல அடிச்சுட்டேன்! விவரமான பொண்ணு தான் மீனா! அப்படியெல்லாம் திடீர்னு சொல்லாம காணாமப் போக மாட்டா! அதனால தான் பயமாயிருக்கு. இப்ப நீ வேற இப்படி பண்ணிட்டதால ஊரே என்னை குத்தம் சொல்லும் போல இருக்குது.’

அது எங்க பெரியம்மா பண்ண வேலை. அது அப்படித்தான் சொல்லும். நீங்க மொதல்ல போய் ஸ்டேசன்ல கம்ப்ளெய்ண்ட் குடுங்க! அப்புறம் அவ எங்க போவாள்னு யோசனை பண்ணுங்க! டீச்சர் கிட்ட கேட்டதுல மீனா மதியத்துல இருந்தே பள்ளிக் கூடத்துல இல்லைன்னு சொன்னாங்க! சரி வீட்டுக்கு மதியமே தனியா வந்துட்டாளோன்னு தான் நான் நினைச்சு மத்த பிள்ளைங்களோட வந்துட்டேன்.’

மைதிலி இப்ப உனக்கு பரவால்லியா? உனக்கு துணைக்கு கூட நிற்க ஆள் இல்லையே! உன் பெரியம்மா உன்னை வீட்டுப்பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டு போகுதே!’

எனக்காக கவலப்படாதீங்க நீங்க, எனக்கு இங்க டவுன்ல ஒரு தொண்டு நிறுவனம் இருக்கிறது தெரியும். அங்க அநாதையின்னு சொல்லி நான் சேர்ந்துக்குவேன்.’ அவள் சொல்லச் சொல்ல எனக்குத்தான் அப்படி வருத்தமாய் இருந்தது. இருந்தும் இப்படியான விசயங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டு தான் இருக்கிறது. தனிமனிதன் அதற்காக என்ன செய்து விட முடியும்? ஸ்டேசன் வரை சென்று வந்து விடுவதாக சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.

பார்த்தால் என் மச்சினனும் கூடவே என் மகள் மீனாவும் வந்து கொண்டிருந்தார்கள். கீதா வந்திருக்கிறாளா? என்று பார்க்கும் சமயமே அவளும் தூரத்தே வந்து கொண்டிருந்தாள். மச்சினன் தான் எனக்கு விளக்கமாய் சொன்னான். மீனா பயந்து போய் அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தாள்.

மீனா வயிற்றை வலிக்கிறதென்று மதியமே பஸ் ஏறி விட்டாளாம் அம்மாவை பார்க்க. இப்படி முன்பாகவே இரண்டு முறை பஸ் ஏறியிருக்கிறாளாம். ஆனால் பள்ளி விடும் சமயம் சரியாக திரும்பி விடுவாளாம். இன்று மாத்திரைகள் போட்டும் வலி நிற்காமல் போய் விட்டதாம். என் செல்போனுக்கு தகவல் சொல்ல மச்சினன் அழைத்த போதெல்லாம் அது செத்துக் கிடந்ததாம். அது எப்படி எடுக்கும்? அந்த போன் தான் தண்ணீரில் விழுந்து நாசமாகி விட்டதே! வேறு எண்ணைத்தானே ஆறேழு வருடமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் நான்.

கடைசியாக இங்கே நான் பயந்து விடுவேனென்று கார் போட்டு வந்து விட்டார்களாம். இவன் விளக்கிக் கொண்டு இருக்கையில் கீதா மைதிலியைப் பார்க்க சென்று விட்டாள். அவள் பின்னே மீனாவும் ஓடி விட்டாள். வீடு போய் பார்த்து விட்டு தகவலறிந்து தான் இங்கு வந்தார்களாம். ஒரு வார்த்தை பெற்ற பெண், அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா! என்று சொல்லவில்லை பாருங்கள். எனக்குத் தெரியாமலே முன்பாகவே பேருந்து ஏறிப்போய் அம்மாவை பார்த்து விட்டு வந்திருக்கிறாள் பாருங்கள்.

மச்சினன் இப்படி பொறுப்பாய் என்னிடம் நின்று பேசுவதெல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. முன்பாக, வாங்க மாமா! என்று மாமனார் வீடு சென்றாலும் ஒரு வார்த்தை வந்தவனை விசாரிப்பதோடு சரி. மத்தபடி அதிகம் ஒட்டுறவாய் பேசிப்பழக்கம் இல்லாதவன். காலேஜில் அபோது கடைசி வருடம் சென்று கொண்டிருந்தான். இப்போது எங்கோ கம்பெனியில் வேலை கிடைத்து சென்று கொண்டிருப்பதாய் கேள்விப்பட்டிருந்தான். சம்பாதிக்க ஆரம்பித்த்தும் பக்குவம் வந்து விட்டது போலும்.

நல்லவேளை அக்காவை கொடுமைப்படுத்தியவன் என்று நினைக்காமல் இருக்கிறானே! சம்பாதிக்க துப்பில்லாதவன் என்று நினைக்காமல் இருக்கிறானே! இப்போதைக்கு மீனாவின் வயிற்று வலி நின்றிருப்பதாகவும் என்ன என்று காலையில் வெறும் வயிற்றில் வந்தால் தான் ஸ்கேன் செய்து பார்த்து சொல்ல முடியுமென்று டாக்டர் சொல்லி விட்டதாகவும் உபரி தகவல் சொன்னான்.

எனக்கு மீனாவை காட்டி விட்டு கூட்டிப் போகும் ஐடியாவில் தான் வந்திருக்கிறார்கள் போல இருக்கிறது இருவரும். சரி மீனா மீது அவளுக்கும் பாசம் இல்லாமலா போய் விடும். கொஞ்சம் நேரத்தில் அவர்கள் வந்த காரிலேயே கிளம்பினார்கள். கீதாவும் மீனாவும் ஒரு வார்த்தை என்னிடம் பேசவில்லை. அட போயிட்டு வர்றேன்னாவது சொல்லிச் சென்றிருக்கலாமே! பெண் பிள்ளைகளுக்கு அப்பாவின் மீது தான் பாசம் அதிகம் என்று எவன் சொன்னான் என்று தெரியவில்லை. சொன்னவனை கூட்டி வந்து ரை என்று ஒன்று விட வேண்டும். தப்பு தப்பாவே சொல்லி வச்சுட்டு போயிடறாங்க சார்.

சரி போகட்டும். நான் மைதிலியிடமே திரும்பி வந்தேன். மைதிலிக்கு இரவு உணவாக என்ன வேண்டுமென கேட்டுப் போய் வாங்கி வர வேண்டும்.

ஜோசியகார்ரே! உங்க மனைவி தங்கமா பேசுறாங்க. ஏன் இப்படி பிரிஞ்சு ஆளுக்கு ஒரு திசையில வாழுறீங்க? ஒன்னுமே புரியலை!’ என்றாள் மைதிலி. அவளுக்கு புரியாமல் இருப்பதே சரி.

கீதா முன்னை விட கொஞ்சம் ஒரு சுற்று பருத்திருந்தாள் போல இருந்தது. கம்பெனி வேலை அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்பா அம்மாவோடு இருப்பது மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கைநிறைய சம்பளம் வாங்குவது கூட மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை மிகிழ்ச்சி இருந்தென்ன? அட மாமனாருக்கும், மாமியாருக்குமா அறிவில்லை. இது தப்பு என்று சொல்லி தாட்டி விடாமல் என்ன பொழப்பு இது? பெண்ணை வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவளை ஏன் கட்டிக் கொடுக்க வேண்டும்? சரி பெண்ணிடம் கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்டு போறதுக்கு சம்மதமா? என்றாவது கேட்டிருக்க வேண்டுமல்லவா! கடைசியில் ஒத்தையில் கிடந்து அவதிப்பட்டுக் கொண்டிருப்பவன் நானாயிற்றே!

எனக்கு சற்று முன்பு கூட மைதிலியின் துயர நிலையை எண்ணி அவளுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து விடலாமா! என்று கூட சிந்தனை வந்தது. பின் ஒரு மனிதன் அதைத் தானே செய்ய முடியும். எத்தனை நாளைக்கு இப்படி? சோதிடம் பார்த்து கணித்து மற்றவர்களுக்கு சொல்பனுக்கே நிலைமையைப் பாருங்கள். தேடி வரும் சாதகமெல்லாம் நன்றாகவே இருக்கிறது. இனி நான் தான் என் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடிச் சென்று பார்க்க வேண்டும். இப்படியே வாழ்க்கை கழிந்து விடுமா? என்று.

சரி இப்போது என்ன கெட்டு விட்டது? கட்டின பொண்டாட்டி மருத்துவமனை வந்து விட்டு பேசாமல் செல்கிறாள் என்றால் நானாவது எப்படி இருக்கே கீதா? என்று கேட்டிருக்கலாம். ஒரு வீம்பு தான். கடைசியாக மச்சினன் தன் அலைபேசி எண்ணை கொடுத்து சென்றானல்லவா!. அதற்கு போன் போட்டு ரெண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும்.

அந்தக் கார் அவள் ஊருக்கு சென்றதென்றால் அதுவே கடைசியாக இருக்கட்டும். இந்த சங்காத்தமே வேண்டாம். அப்போது தான் அடுத்தகட்ட நடவடிக்கையை சீக்கிரம் செய்ய முடியும். காலம் பொன் போன்றதாமே! கிழவாடி ஆன காலத்தில் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் சாவதற்குத் தான் வழி தேட வேண்டும். என்னமோ தெரியவில்லை இந்த மூளை இன்று அப்படி வேகமாய் இயங்க ஆரம்பித்து விட்டது.

மைதிலிக்கு இட்லி பார்சல் வாங்கி வருவதாக சொல்லி விட்டு வெளிவந்தேன். பெண்டாட்டி கீதா ஒரு புரோட்டா ரசிகை. வெளியே டவுன் பக்கம் வந்தால் அவளுக்கு புரோட்டா பார்சலோடு தான் செல்ல வேண்டும். மல்லிகைப்பூ வாங்கிச் சென்றால் சத்தம் தான். இதை தலையில் வைத்துக்கொண்டு ஊருக்குள் இருக்கும் நாலு வீதியையா சுற்றி வருவது? என்பாள். உண்மை தான். இவள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஊருக்குள் நடந்தால் பார்ப்பதற்கு கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். எல்லாரும் வேலை வெட்டிக்கு சென்றிருப்பார்கள்.

ஆனது ஆகட்டும் காரைப் போடுகிற சப்தத்தில் திருப்பி விடலாம் கிராமத்துக்கு, என்று அலைபேசியை எடுத்து விட்டேன். கீதாவோடே வாழ்வா? இல்லை மறுமணமா? எதிர்முனையில் சொல்லுங்க மாமா! என்றான் மச்சினன்.

-எங்க கார் சத்தத்தையே காணமே!

-அதை அப்பலையாவே தாட்டி உட்டுட்டமே! பந்தக்கால்ல சாவி இருந்துச்சு எடுத்து வீட்டை நீக்கிட்டோம் மாமா. அக்கா அடுப்பை பார்த்துட்டு இருக்குது. மீனா பெரிய மனுஷி ஆயிட்டா மாமா! உங்களை கூப்பிடலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே எனக்கு கூப்புட்டீங்க!, என்றான் மச்சினன்.

000
இந்தச் சிறுகதை ஒரு தவறான இடத்தில் ஆரம்பமாவதற்கு நானே காரணம். வேண்டுமென்றே தேவையற்ற ஒரு இடத்தில் ஆரம்பமான இந்தக்கதை சுற்றி வளைத்து வந்து முடிகிறது. சொல்லல் முறை ஒன்று மட்டுமே இந்தக்கதையை காப்பாற்றி இருக்கவேண்டும். போக சிக்கலான இடத்தில் ஆரம்பித்து முடிக்க இயலுமா? என்ற முயற்சியை மேற்கொண்டதால் தான் இப்படி! நேரான இடம் எது? என்பது வாசகர்களுக்கு புரியலாம் அல்லது புரியாமலும் போகலாம். ஆனாலும் இப்படி என்னை நானே சங்கடப்படுத்தி எழுதிப் பார்ப்பது நடந்தேறி விடுகிறது.
                                                அன்போடே என்றும்

                                                      வா.மு.கோமு.

Post Comment