வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

புதிய கவிதைகள் சில!

மல்லாக்கப் படுத்து சூரியனைப்
பார்த்து காறித் துப்புவது
போன்றது தான் இந்த வாழ்வு!
000

யாரோ தலை மீது கல்லைப் போட
துரத்தி வந்த வண்ணமே இருப்பது
தான் இந்த வாழ்வு!
000

விந்துத் துளிகளில் உயிர்
அணுக்கள் இல்லாத கடவுளிடம்
கையேந்தி இறைஞ்சி நிற்பது
தான் இந்த வாழ்வு!
000

தன்னை மட்டுமே காப்பாற்றச்
சொல்லி கோவிலை வலம்
வருகையில் தடுக்கி விழுந்து
பல்லை உடைத்துக் கொள்வதே
இந்த வாழ்வு!
000

மஞ்சுக் கோழி ஒரே அடையில்
பதனஞ்சு குஞ்சுகள் பெற்றெடுத்து
அழைத்துப் போவதும் இந்த
வாழ்க்கையோடு சேர்த்தி தான்.

000

ஓடிப்போனவள் திரும்பவும்
ஊருக்குள் வந்து சேர்ந்த பிறகு
பேசுவதற்கு நிறையவே
வார்த்தைகள் இருந்தன!
000

வழிமீது விழி வைத்துக் காத்திருந்தான்
விழி மீது எவரேனும் மிதியாமலிருக்க
வழி மீது கண் வைத்திருந்தான்!
000

இங்கென்ன மடியில முடிஞ்சா வச்சிருக்கேன்?
காசு வேணும் காசு வேணும்னு
பன்னண்டு மணியானா நின்னுக்குறே?
உன்னை பெத்த கடனுக்கு சோறு
மூனுவேளை வட்டல் நம்ப எடுத்துக்
கொட்டத்தான் உங்காத்தாவுக்கு எழுதி வச்சிருக்கு!
நீ குண்டி வெடிச்சு சாவ நான் காசு அவுக்க இல்லெ!
ஆளப்பாரு! கொன்னு போடுவேன் கொன்னே போடுவேன்னு
நாலு சனம் கேக்க கத்திக்கடா! என்னெக்
கொல்லத்தானே உன்னெப் பெத்தேன்!
சாவுறேன் சாவுறேன்னு எனக்கு பூச்சாண்டி
காட்டுறியா? சாவுடா போயி! ஆனா ஊருக்குள்ள
நல்ல குடிதண்ணி கெணத்துல உழுந்து செத்துடாதே!
போ! போயி காட்டுல எங்காச்சிம் மரத்துல
தூக்குப் போட்டுச் சாவு! இல்ல ரயில் ரோட்டுல
வுழுந்து சாவு! நான் எழவை எடுத்துக்கறேன்!
பொழைக்கிற பையன் பொச்சைப் பார்த்தாவே
தெரியுமாம்! இது வெளங்கவா போகுது?

000

இங்கு என்னைச் சுற்றிலும் எல்லாமே
சுகமாகவே இருக்கிறது!
கார்க்காரர்கள் ஹாரன் அடித்து
சைக்கிள்காரர்களை ஒதுங்கச் செய்து
ஓரமாய்ச் செல்கிறார்கள்! –இருசக்கர
வாகனங்கள் மிதமான வேகத்திலேயே
சாலையில் பயணிக்கின்றன!
லூசுக் கிழவி எப்போதும் போல
மேலாடையை தெருவில் இழுத்துக்
கொண்டே சாலையைக் கடக்கிறாள்.
டீக்கடைப்பையன் பத்திரமாய் டீ நிரம்பிய
கண்ணாடி டம்ளர்களை டெய்லர் கடைக்கு
தூக்கிச் செல்கிறான்! – பேருந்து நிறுத்த
நிழற்குடையில் எங்கு செல்வதெனத் தெரியாமல்
பேருந்திற்காய் காத்திருக்கும் பாவனையில்
அமர்ந்திருக்கும் நான் உனக்காக எழுதப் போகும்
கவிதையின் முதல் வரியை இப்படி
ஆரம்பிக்கிறேன்! நீ இப்போது உனக்கான
புதிய காதலனை கண்டறிந்து விட்டாயா
மூஞ்சிப் புத்தக வாயிலாக?

000

இந்தப் பள்ளிக்கு எப்போதும்
விடுமுறை நாட்கள் தான்!
படிப்பிக்க ஆசிரியர்களுமில்லை
கற்றறிய பிள்ளைகளும் இல்லை!
மெட்ரிகுலேசன் பள்ளி செல்லும்
பேருந்திலிருக்கும் குழந்தைகள்
ஊரின் கடைகோட்டில் நின்றிருக்கும்
இந்த நடுநிலைப் பள்ளியை
கடந்து போகையில் சும்மாவுக்கேனும்
கையசைத்துச் செல்கின்றனர்!
ஏதுமறியாத கட்டிடம் புன்னைகைக்க
தெம்பின்றி வெறுமனே நின்றிருக்கிறது!
000

-ஆக பேருந்தில் நீ செல்கையில் எதுவும்
நடைபெறவில்லை என்கிறாய் அப்படித்தானே?
-இல்லை, நான் வீட்டில் என் படுக்கையில்
அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில்
அப்படி நடந்தேறி விட்டது!
-அவன் ஆள் எப்படியிருந்தான் என்று உங்களுக்கு
நினைவிருக்கிறதா? ஆளா? விலங்கா?
-நிச்சயமாக அவன் ஆண் தான்! என் அறையில்
அவன் திருட வந்தவன் தான்.
-அதெப்படி அப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள் மிஸ்?
-மின்சாரம் நேற்றைய இரவில் திடீரென
அணையாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவன்
வேறு ஏதேனும் பொருளை என் அறையில்
களவாடிச் சென்றிருந்திருப்பான்.
-ஆக மின்சாரம் போனது தான் உங்கள்
உடல்நல பாதிப்பிற்கு காரணமென்கிறீர்கள்!
-ஆம், அதைத்தான் சொல்கிறேன். மின்சாரம் சென்றபோது
அவன் என்னிடம் வினவினான் பலமுறை!
-என்னவென்று?
-மிஸ் எங்கிருக்கிறீர்கள்? இங்கே இருளாய் இருக்கிறது!
-நீங்கள் என்ன சொன்னீர்கள்?
-நான் படுக்கையில் வெறுமனே படுத்திருந்தேன்!
-பின் எப்படி தவறு நிகழ்ந்தது?
-ஒருவாறாக அவன் என்னை கற்பழிக்கப்போவதாய்
கூறியதும் நான் படுகையில் இருப்பதாய்
உடனே கூறி விட்டேன்! பிறகு தான் அது நடந்தேறி விட்டது!

000

Post Comment

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2016

புதிய புகைப்படங்கள்


 தானாவதி நாவலை பாமரன் வெளியிட ஈங்கூர் ரகு பெற்றுக் கொள்ளல்!

 தேர்த்திருவிழா சிறுகதை கொத்தை அருண்வேந்தன் வெளியிட யுவன் பிரபாகரன் பெற்றுக் கொள்ளுதல்.
                                                               பல்லடம் ராசுவுடன்!ஷாஜகான் டுர்டுரா சிறார் நாவலை வெளியிட கி.ச.திலீபன் பெற்றுக் கொள்ளுதல்!க.மோகனரங்கன் அழுவாச்சி வருதுங் சாமி சிறுகதை தொகுப்பை வெளியிட ராஜேந்திரசோழன் பெற்றுக் கொளுதல்!

Post Comment

வசனம் பகுதியை எடுத்துக் கொண்ட கடலை
Post Comment

வியாழன், ஆகஸ்ட் 18, 2016

ஐந்தவித்தான் நாவல் பார்வைமுன்பாக ரமேஷ் பிரேதனின் புத்தகம்அவன் என்ற சொல்தஞ்சை பதிப்பகம் ஒன்றின் வாயிலாக வந்து கவனமில்லாமல் போனது வாசிப்பாளர்களுக்கு நினைவில் இருக்கலாம். தமிழில் வெளிவந்த முக்கியமான நாவல்களில் அதுவும் ஒன்று. இரண்டு எழுத்தர்கள் முன்பாக ஜோடி போட்டுக் கொண்டு எழுதுகையிலிருந்து அவர்களின் தீவிர வாசகன் நான். தமிழில் நான் ஏதேனும் ஆச்சரியங்களையும், கொஞ்சமாய் கற்றுக் கொள்ளல்களையும் இவர்கள் எழுத்தின் வாயிலாக உணர்ந்திருந்தேன்.

ஒரு ரஜினி படம் எப்படி ரஜினி ரசிகனுக்கு திருப்தியளிக்குமோ அப்படித் தான் என்றே வைத்துக் கொள்ளலாம். இன்றும் என் ஆச்சரியங்களில் ஒன்று முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தனசிறுகதைக் கொத்து. அடுத்து சொல் என்றொரு சொல்நாவல். பின்பாக மயானம், கபாலம் என்று பைத்திய எழுத்தில் வந்த சில கவிதைகள்.

அவன் என்ற சொல் நேர்கோட்டில் சொல்லப்பட்ட கதை என்றால் ஐந்தவித்தானும் வழுக்கிச் செல்லும் நடையில் நேர்கோட்டில் பிரயாணம் செய்யும் நாவல். தமிழில் ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி அவரவர் தளங்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரமேஷும் தன் இருப்பை இங்கே நிலையுறுத்திக் கொள்ள சற்று சரளமான நடையில் வாசகனுக்கு மாதவனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லிச் செல்கிறார்.

மாதவனின் தந்தையார் ஒரு நாவிதர். உயர் ஜாதி மனைவி அவர் கண் பார்க்க அடுத்தவரிடம் சோரம் போகிறவர். திருமண நாளிலேயே வயிற்றில் வாங்கிக் கொண்டு இவரைக் கட்டிக் கொண்ட மனைவி. முதல் பிள்ளையான மாதவனின் அக்கா மழை நாள் ஒன்றில் செத்துவிடும் சாவிலிருந்து துவங்குகிறது நாவல். மாதவனின் பார்வையில் விரியும் நாவல் நாம் ஏற்கனவே அறிந்துணர்ந்த வாழ்க்கைத் தகவல்களை மட்டுமே சொல்லிச் செல்கிறது. மொழி நடை மட்டுமே ஒரு நாவலை எப்படி காப்பாற்றும் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது எனக்கு

ஒரு குறியீடாக நாவலில் வந்து சோத்துக்குப் பறந்து கொண்டிருந்த தூங்கும் பூனையின் தலையில் மாதவனின் தாய் குழவிக் கல்லைப் போட்டுக் கொல்வதை இந்தத்தமிழ் உலகம் அச்சச்சோவென வாயில் கைவைத்து வருத்தப்படும் காட்சி கண்முன் விரிகிறது. அதுவும் அவளது தீட்டுத்துணியை ஒரு நாயைப்போல அது கவ்வி தெருத்தெருவாய் இழுத்து ஓடுவதும், மாதவனின் தாய் அதைத் துரத்திச் சலிப்பதும் கண்முன் காட்சியாய் விரியும் எழுத்து.

அம்மா சர்க்கஸில் சேர்ந்து விட்டாள். மிருகங்களுக்கு குண்டி கழுவும் வேலை. காலையில் கூண்டுகளுக்குள் புகுந்து மலம் அள்ளுகிறாள். யானை அவளை மிதித்துக் கொன்ற செய்தி எனக்குக் கிடைத்தால் மகிழ்வேன்என்று மாதவனிடம் தந்தை சொல்கையில் அவன் தன் தாயைப் பற்றிய நினைப்பை மறந்திருந்தான்.

அக்காவின் சாவுக்கு ரிக்‌ஷாக்காரன் தான் காரணம் என்பதை மாதவன் தன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா ரிக்‌ஷாக்காரனின் குறியை அறுக்கிறாள். மாதவன் வெட்டுப்பட்டுக் கிடக்கும் குறியை பாலித்தீன் பையில் போட்டு பாதுகாக்கிறான் என்று ஆரம்பத்தில் சரளமாய் வரும் அதிர்ச்சிகளை எல்லாம் தமிழுலகு எப்போதோ இதை விட பயங்கரங்களை இவர்கள் எழுத்திலிருந்தே வாங்கிச் சீரணித்துக் கொண்டது மறந்திருக்கலாமோ ரமேஷிற்கு! காத்திரங்களையும் வீரியங்களையும் இழந்த எழுத்து நல்ல சொல்முறைக்கு மட்டும் மாறித் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் எளிய வாசகனுக்குமானதாக!

கடலினுள் அம்மா இறங்கி ஆழத்தினுள் மூழ்கி விட்டதாக தகவல் வருகிறது மாதவனுக்கு. கடலில் மூழ்கினோரெல்லாம் இறப்பதில்லை என்பதையும் மாதவன் சேர்த்து உணர்கிறான். மாதவன் பின்பாக வீடு கட்ட அக்கா இறந்த பூவரச மரத்தடியில் குழி தோண்டுகிறார்கள். நான்கடி ஆழத்தில் மூடியிட்ட தாழி ஒன்று கிடைக்கிறது. அதனுள் தொப்புள்கொடி இல்லாத பெண்குழவியை வெளியில் எடுக்கிறார்கள். தன் அக்காவே தோன்றியிருப்பதாக மாதவன் அழுகிறான். நவீனத்துவம் மீண்டும் தலைகாட்ட ஆரம்பிக்கிறது நாவலில் பூமிதா பிறந்த பொழுதிலிருந்து!

இந்த நாவல் சொல்ல வரும் சேதி என்னவெனில், சில விசயங்களை வாசகனின் எளிய வாசிப்புக்கு முட்டுக்கட்டையிட்டு அவன் மண்டையைக் கொஞ்சமாய் யோசிக்க விடுதல் தான். தியானத்தில் காட்டில் இருக்கும் சாமியாரை புற்று வளர்ந்து மறைத்து விடும். அந்தளவு ஆழமான தியானத்தில் இருப்பார். சினிமாவில் நாம் பார்த்திருப்போம் ழைய வெள்ளை கருப்பு படங்களில். காட்டினுள் வந்த மகராசன் தன் கத்தியை புற்றினுள் நுழைத்து முனிவரின் கண்ணை போக்கடித்து விட புற்றில் ரத்தம் கசியும். அப்புறம் சாபங்களும் நடந்தேறும். இந்த நாவலில் மாதவன் வீட்டில் தியானத்தில் அமர .. தொடருகிறது!

நாவலின் பகுதி இரண்டு தத்துவார்த்தமாக நகருகிறது! அதை அவ்வளவு சுலபமாக வாசிக்க இயலாது தான். அது தான் நான் விரும்பியதுமாக இருக்கலாம்! மனநோயின் வளர்சிதை மாற்றம் என்று பகுதி இரண்டு சொல்கிறது. அதை மனச்சிதைவோடு வாசிக்க மேலும் இரண்டு நாட்கள் எனக்குத் தேவை!

ஐந்தவித்தான் (நாவல்) ரமேஷ் பிரேதன்.
விலை -140. டிஸ்கவரி புக் பேலஸ்.


000

Post Comment