எரியும் பூந்தோட்டம்ட்ரெண்டிங்கதை எழுதும் வல்லுனர்களால் ஒரு நாவல் எழுதப்பட்டால் எப்படியிருக்குமோ.. அப்படி இருந்தது. சாந்ததத் மொழிபெயர்த்ததில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. எய்ட்ஸ் பற்றியான விழிப்புணர்வு நாவலாக இதை கொள்ளாலாம்!

 

கதையை போட்டிக்கென்று அந்த சமயத்தில் எழுதுபவர்கள்.. எழுதி பரிசு பெறுபவர்கள் அப்போதைய சமகால பிரச்சனையை எடுத்துக்கொண்டு பேப்பர் செய்திகளை வைத்து நாவலென ஒப்பேற்றிவிடுவார்கள்! கருமம் என்னான்னா தேர்ந்தெடுப்பாளர்களும் அதே மனநிலையில் இருக்க.. சிறப்பு நாவலென கருமத்தை அப்போதைக்கி பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்து கொண்டாடி விடுவார்கள்.

 

இந்த மாதிரியான எழுத்தர்கள் காணாமல் போய்விடும் காலத்தில் வாழ்கிறோம்! எந்த தேர்ந்தெடுப்பாளர்களும் ஏமாளிகள் அல்ல.. என்பதை நிரூபணம் செய்த போட்டிகள் நடந்து எல்லாமும் அரங்கேறிவிட்டன!

 

கொரனா என்றால்,, அதைப்பற்றி எழுதி பரிசு பெற எழுதிய எழுத்தாளன் சோர்ந்து போய்விட்டான்! அவன் பதறிக்கையில் இருக்கான்! (விடுவோம்)

 

எரியும் பூந்தோட்டம்.. முதலாக தெலுங்கு நாவல்! தெலுங்கில் இலக்கியம் இப்படித்தான் வளரும்! வளரணும்! நாலு குத்தாட்ட பாடல், நாலு சண்டைக் காட்சிகள் இருந்தால் சினிமாவையே காப்பாற்ரும் உலகில் இப்படி ஒரு நாவல் அவர்களை எந்த துன்பத்தையும் படுத்தியிர வாய்ப்பிருக்காது!

 

இந்த நாவல் துக்கங்களுக்கான வழிபாதை! ஆனால் கேனைத்தனமான நாயகனோடு சென்று இறுதியில் ரமணிச்சந்திரன் நாவல் முடிவு போல நடந்தேறுகிறது! எல்லாரும் நல்லா வாழுங்கப்பா!

 

-சாகித்ய அக்காதமி. விலை 145. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்