காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த
இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம்
கழிந்து அதே தலைப்பில் சிறுகதை தொகுப்பாக கிட்டியது. எனது மொழியில் உனக்கொரு காதல்கதை
என்கிற கதையை கதைசொல்லி இதழ் வாயிலாக வாசித்திருந்தேன். மெதுவாக இந்த இரட்டையர்களின்
கதைகளைத் தேடத்துவங்கினேன். சிதைவு இதழும் கிட்டியது. தொடர்ந்து அவைகள் கவிதைகளா? என்றே தெரியாமல் இரண்டு இதழ் முழுக்க கவிதைவடிவில்
எழுதியிருந்தார்கள். (இதழ் பெயர் மறந்துவிட்டது) அதுவே பின்பாக கவிதைவடிவிலில்லாமல்
உரைநடை வடிவில் புத்தகமாக மருதாவில் கிடைத்தது. புதுப்புனல் வாயிலாக இவர்களது கதைகள்
தொடர்ந்து வாசிக்க கிடைத்தன. தேடலில் புதைக்கப்பட்ட பிரதிகளும் மறுக்கப்பட்ட மனிதர்களும்
என் தந்தையாரின் அடுக்கிலேயே இருந்தது. வாசிக்க சவால் தரும் எழுத்து இவர்களுடையது.
சவாலகத்தான் நான் வாசித்தேன்.
பின்பாக இவர்களது நாவல் ‘சொல்
என்றொரு சொல்’ ‘அவன் பெயர் சொல்’ என்று கிட்டியது. பின்பாக ரமேஷ் தனித்து எழுதத்துவங்கிவிட்டார்.
ஐந்தவித்தான் அப்படி வந்ததுதான். ஒருகட்டத்தில் இவரது எழுத்துக்களை இதழ்கள் வாயிலாக
காணமுடியவில்லை. நல்லபாம்பு-நீல அணங்கின் கதை, அருகன்மேடு வாசிக்க உகந்ததாக எனக்கில்லை.
அடுக்கில் சேகரித்து வைக்கும் பழக்கமில்லாதவனான நான் நண்பர்களுக்கு கொடுத்துவிடுவது
உண்டு. சமீபமாக இவரது புத்தகங்கள் கைவசம் என்னிடம் எதுவுமில்லை. இந்த சிறுகதை தொகுப்பில்
23 கதைகள் உள்ளன. சில கதைகளை காரணம் நிமித்தமாக ஒதுக்கிவிட்டார். மேலும் பின்பகுதியில்
வந்த கதைகள் பலவற்றை இப்போது தான் வாசிக்கிறேன். புதுச்சேரியில் பன்றிகள் வீதிவீதியாக
சுற்றுவது பற்றியும், மனநிலை பிறழ்ந்தவர்களின் நடமாட்டங்கள் பற்றியும், முன்பு கண்ட
வீச்சுகள் இல்லாமல் எளிமையாகவே கதைகளை சொல்லிச்செல்கிறார். துறவி, கூத்தாண்டவன், பயம்,
கோடை பகல் தூக்கம், என எளிமையான கதைகள் வசீகரமாய் சிறுகதை அம்சங்களோடு அமர்ந்திருக்கின்றன.
மூலிகை பதிப்பகம், - விலை-
340. தொடர்பு எண் -8608610563
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக